அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை இந்தியாவிலேயே முதலாவதாக, குழந்தைகள் மருத்துவத்துடன் தொடர்புடைய மனநலப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது

சென்னை, நவம்பர் 14 2022: ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, இந்தியாவின் முதலாவது குழந்தைகள் மருத்துவத்துடன் தொடர்புடைய மனநலம் மற்றும் கல்வித் பிரிவைச் (Apollo Paediatric Psychiatry Liaison & Education department (APPLE), India’s first Paediatric Liaison Psychiatry Department in Chennai) சென்னையில் தொடங்கியுள்ளது. அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் செயல் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி [Ms Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group], அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி [Ms Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group] மற்றும் பிரபல திரைப்படக் கலைஞர் கௌரி ஜி கிஷன் [Ms. Gouri G Kishan, Popular Cine Artist] ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பி.பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் [by B.Priyanka Pankajam IAS., Executive Director Tamil Nadu Corporation for Development of Women] இந்தப் பிரிவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 14 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் மாஸ்டர் ஏ.ஆர். இளம் பரிதி [Master AR Illamparuthi, Under 14 world Youth Chess Champion] அவரது சாதனைகளுக்காக பாராட்டப்பட்டார். 

‘ஆப்பிள்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் அப்போலோ குழந்தைகள் மருத்துவத்துடன் தொடர்புடைய மனநலம் மற்றும் கல்விப் பிரிவு அல்லது துறையின் தனித்துவமான அம்சம் என்னவென்றால் குழந்தை நோயாளிகளின் முழு சிகிச்சை செயல்முறையிலும் அது தொடர்பான மனநல மருத்துவரை ஈடுபடுத்துவது ஆகும். அந்த மருத்துவர் குழந்தையின் உடல்நிலை குணமடையும்போது பல்வேறு மனம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவார். மேலும், இது மன நலத்திற்குக் காரணமாகக் கூறப்படும் உடலியல் அல்லது நோயியல் தொடர்பாக ஆய்வு செய்யப்படாத பல நிலைகளிலும் கவனம் செலுத்துகிறது. 

இந்தத் துறையின் தொடக்க விழாவில் பேசிய அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி, (Suneeta Reddy, Managing Director, Apollo Hospitals Group) “பொதுவாக நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு என்பது மனதையும் உடலையும் உள்ளடக்கிய முழுமையான அம்சம் ஆகும். நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் போது, ​​நாம் அடிக்கடி உடல் தொடர்பான அம்சங்களில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் குணப்படுத்தும் செயல்பாட்டில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறோம். வழக்கமாக, இந்த அம்சம் குடும்பம் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. ஆனால் குழந்தைகள் நோய்வாய்ப்படும்போது இது மிகவும் சிக்கலானதாக அமைகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, அதன் ஒரு பிரிவாக குழந்தை மருத்துவத்துடன் தொடர்புடைய மனநலப் பிரிவைத் தொடங்குகியுள்ளது. குழந்தைகள் தினத்தில் இந்தப் புதிய பிரிவைத் தொடங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்”  என்றார்.

இந்தப் பிரிவு (துறை) தொடங்கப்பட்டதன் மூலம், ஒரு தொடர்பு மனநல மருத்துவர் (Liaison Psychiatrist), முதன்மை குழந்தை மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவர்களுடன் இணைந்து நோயாளிகளை மதிப்பீடு செய்வார். இந்த மதிப்பீட்டின் விளைவாக, குழந்தையின் மன நலனை உள்ளடக்கியதாக சிகிச்சை முறை மாற்றி அமைக்கப்படும். மனநல மருத்துவர், நோயாளிக்கும் முதன்மை மருத்துவருக்கும் இடையே பாலமாக இருப்பார். 

தொடர்பு மனநல மருத்துவர் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குவதுடன் குழந்தையின் நோய்களை சிறப்பாக சமாளித்து அதில் இருந்து வெளிவர உதவுவார். நீண்ட கால நோய்கள், தீவிர சிகிச்சை தேவைப்படும் மிகவும் ஆபத்தான நோய்கள் போன்றவற்றில் இந்த மனநல அம்சம் மிகவும் முக்கியமானதாகும். எடுத்துக்காட்டாக, தவறவிட்ட பள்ளி வகுப்புகள், பெற்றோர்கள் தங்கள் பொறுப்புகளை எவ்வாறு கையாள வேண்டும், தனிப்பட்ட கடமைகள் மற்றும் தங்கள் குழந்தையை நடத்துவது போன்ற சிக்கல்கள் இதில் வரும். இந்த சிறப்புப் பிரிவின் மூலம் இது போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். 

தொடர்பு மனநல மருத்துவராக செயல்படுபவர், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு நோயாளிகளின் நோயைப் பொறுத்து கருணையுடன் அவர்களைத் தொடர்பு கொள்ளும் விதம் குறித்துப் பயிற்சி அளிப்பார். இது குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் தொடர்புகொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கும். அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது அவர்களின் அனுபவத்தை மேம்படுத்த உதவும். குணப்படுத்துவதற்கான இந்த புதிய முற்போக்குத் திட்டம், நோயாளிகள், பெற்றோர் மற்றும் பணியாளர்களுக்கு பயனளிக்கும். இது குணப்படுத்தும் கால அளவை விரைவுபடுத்துவதுடன் நீண்ட கால மற்றும் சிக்கலான நோய்களைச் சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது. 

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் போல் குழந்தைகள் உடையணிந்து மருத்துவமனையை பார்வையிடும் ஒரு செயல்பாடு, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதன் மூலம் குழந்தைகள் தங்களுக்கான சிறப்பு நாளில் மருத்துவமனையை நிர்வகிப்பதுபோன்ற உணர்வைப் பெற்றனர். உடல்நிலை சரியில்லாமல் இருந்து உயிருக்கு போராடி சிகிச்சைக்குப் பின் மீண்ட குழந்தைகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் பெருநிறுவன பொறுப்புணர்வுத் திட்ட (CSR) செயல்பாடுகளும் இந்த நிகழ்ச்சியின் போது காட்சிப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டன. 

மேலும் விவரங்களுக்கு https://www.apollohospitals.com/  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

For more information please contact:   APOLLO HOSPITALS: Suganthy – 9841714433

ADFACTORS PR| Sricharan – 9842904567 | Jay S – 9940424386 

Author: ADmiNIstRAtoR

7 thoughts on “அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை இந்தியாவிலேயே முதலாவதாக, குழந்தைகள் மருத்துவத்துடன் தொடர்புடைய மனநலப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது

  1. Pingback: AE Gaming
  2. Pingback: aer proaspat
  3. Pingback: filtrarea aerului

Comments are closed.