நடிகர் கதிர், நட்டி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

UAN Film House தயாரிப்பாளர் Mr.Rajadas Kurias தயாரிப்பில், கதாசிரியர் பாக்கியராஜ் கதையில், ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா லக்‌ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி”.

வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்…

11:11 Productions தயாரிப்பாளர் பிரபு திலக் பேசியதாவது…

இங்கு வந்து உங்களை சந்திப்பது மிக மகிழ்ச்சி.

இப்போது திரைத்துறை மிக நன்றாக இருக்கிறது.

பெரிய படங்கள் மட்டுமே ஓடும் என்ற நிலையில் லவ் டுடே போன்ற படங்கள் ஓடுவது பெரிய நம்பிக்கை தருகிறது. பேபல் என்றொரு படம் வந்துள்ளது அந்த படத்தில் வேறு வேறு நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் ஒருவரையொருவர் எப்படி பாதிக்கும் என சொல்லியிருப்பார்கள்.

அதே போல் தான் நம் வாழ்க்கையும் என நினைக்கிறேன்.

இந்தப்படமும் அது போல் தான். மிக நல்ல திரைக்கதை. இப்படத்தை நான் வெளியிடுகிறேன்.

உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக படம் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் ராஜாதாஸ் குரியாஸ்

எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது.

எனக்கு தமிழ் பிடிக்கும். இப்போது திரைத்துறை மிகப்பெரிதாக மாறியிருக்கிறது.

அந்த நம்பிக்கையில் இந்தப்படத்தை இரு மொழிகளில் எடுத்துள்ளோம்.

இதை எப்படி வெளியிடப்போகிறோம் என பயந்து கொண்டு இருந்தோம் அப்போது தான் பிரபு சாரை சந்தித்தோம் அவர் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி.

கொரோனா காலகட்டத்தில் இப்படம் நடந்தது. இப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்து தந்த அனைவருக்கும் நன்றி. தமிழ் திரையில் இப்போது நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் ரெஞ்சின் ராஜ் பேசியதாவது..,

திரையரங்கில் வெளியாகும் எனது முதல் படம் இது. எப்போதும் எனது ஃபேவரைட் தமிழ் பாடல்கள் தான். யூகி படத்தில் வித்தியாசமான இசையில் இரண்டு பாடல்களை தந்துள்ளோம்.

உங்கள் ஆதரவு எனக்கு தேவை. இயக்குநர் ஜாக் ஹாரீஷ்க்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ் பேசியதாவது…

எழுத்தாளர் பாக்கியராஜால் தான் இந்தப்படத்தில் வந்தேன்.

ஜாக் சாரிடம் வேலை பார்ப்பது மிக கடினமாக இருக்கும். கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடந்தது நடிகர்களின் ஒத்துழைப்பால் தான் சிறப்பாக இப்படத்தை முடிக்க முடிந்தது. அனைவருக்கும் நன்றி.

Author: ADmiNIstRAtoR

11 thoughts on “நடிகர் கதிர், நட்டி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் “யூகி” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

  1. Pingback: vigrx plus
  2. Pingback: Hotels in Latvia
  3. Pingback: Diyala Science
  4. Pingback: naked models

Comments are closed.