சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை மற்றும் ‘ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக்கட்டளை’ இணைந்து நடத்தும் “மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்” என்ற நிகழ்ச்சியில் ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்ற நாமக்கல் கவிஞர் அவர்களின் வாக்கிற்கு இணங்க “காளான் வளர்ப்பு முறைகள்” பற்றி Dr.V.இரகுபதி அவர்கள் பயிற்சி அளிக்கிறார்.
இந்நிகழ்ச்சி வருகின்ற 16.2.2022 முதல் 18.2.2022 வரை, அடையாளம்பட்டு DR.MGR E&S வளாகத்தில் நடைபெற உள்ளது. பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் மாண்புமிகு Dr.A.C.சண்முகம் அவர்கள், தலைவர் மாண்புமிகு Er. ACS. அருண்குமார் அவர்களின் ஆசியோடும், இதில் துணைவேந்தர் Dr.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் Dr.C.B.பழனிவேல் அவர்கள், கூடுதல் பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்கள், அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் & நமது பல்கலைக்கழகத்தின் இணைப் பதிவாளர் Dr.ந.சு.இராமலிங்கம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பு செய்ய உள்ளனர்.
குழுத்தலைவரும், வணிகவியல் துறைத்தலைவர் Dr.C.B.செந்தில்குமார் அவர்கள், மகளிர் குழுத்தலைவி திருமதி N.சுதா, Deputy Dean திருமதி கீதாலட்சுமி, இணைப் பேராசிரியை திருமதி B.சுகிதா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி S.அமலி, செல்வி A.கீதா, பேராசிரியர்கள், மற்றும் அலுவலர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.





















9 thoughts on “மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்”
Comments are closed.