ஒரிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான டிக்வோண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது
இந்தியன் டிக்வோண்டோ சார்பில் தேசிய அளவிலான டிக்வோண்டோ சாம்பியன்ஷிப் ஒடிசாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் பல மாநிலங்கலில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கள் கலந்து கொண்டனர்
இந்நிலையில் தமிழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷா சுரேஷ் என்ற 11 வயது மாணவி கலந்து கொண்டார்
சப் ஜூனியர் கேட்டகிரியில் கலந்து கொண்ட இவர் பல மாநிலங்களிடம் போட்டியிட்டு இறுதியாக டெல்லியிடம் போட்டியிட்டு வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்
பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவிக்கு சென்னை விமான நிலையத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்



















