கோடம்பாக்கம் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி

சென்னை, 25 ஏப்ரல் 2020: கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தியதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 150 நபர்களுக்கு அதிமுக சார்பில் தி.நகர் தொகுதிக்குட்ட கோடம்பாக்கம் பகுதியில் உள்ள சியாமளா வதனா தெருவில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் அஇஅதிமுக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் அவர்கள் கலந்துக் கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியை தி.நகர் பகுதி கழக அதிமுக நிர்வாகி லோகேஷ் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்நிகழ்வில் அதிமுக பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR