இளையராஜாவை இழிவாக பேசிய ஒரிஜினல் வீடியோ ஆதாரத்தை டிஜிபி யிடம் ஒப்படைத்தார் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் சாய் வித் சித்ரா என்ற நிகழ்ச்சியில் கதாசிரியர் ரத்தினகுமார் என்பவர் இசைஞானி இளையராஜா மீது ஜாதிய வன்மதுடன் அவரை இழிவுபடுத்திய நேர்காணல் டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடபட்டது.

இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 3 முறை டிஜிபி அவர்களை நேரில் சந்தித்து, அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் புகார் மனு அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. காரணம் அதற்கான மூல வீடியோ கிடைக்கவில்லை என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டு வந்தது, யூடியூப் லிருந்தும் அந்த வீடியோ அழிக்கப்பட்டிருந்தது.

இப்போது அந்த மூல வீடியோவை நாங்கள் தேடி கண்டுபிடித்துளோம், அதை டிஜிபி அவர்களை நேரில் சந்தித்து ஆதார வீடியோவை அளித்து இது குறித்து புகார் மனு அளித்துள்ளோம், ரத்தினகுமார் மீதும் சித்ரா லக்ஷ்மணன் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி உள்ளோம். டிஜிபி அவர்களும் இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்கள்..

Author: ADmiNIstRAtoR

12 thoughts on “இளையராஜாவை இழிவாக பேசிய ஒரிஜினல் வீடியோ ஆதாரத்தை டிஜிபி யிடம் ஒப்படைத்தார் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து

  1. Pingback: ชีทราม
  2. Pingback: bonanza178
  3. Pingback: pink astro
  4. Pingback: lucabet
  5. Pingback: go now

Comments are closed.