விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவருகின்றனர்.
அதன் அடிப்படையில் சென்னை வேளச்சேரியில் உள்ள 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர்கழக வேளச்சேரி பொறுப்பாளர் உதயகுமார் தலைமையில் அரிசி பருப்பு எண்ணெய் போன்ற அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழக கல்லூரி மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் த. மோனிஷ்வரன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.



மேலும் இதில் அகில இந்திய பத்திரிகையாளர் சங்க தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் த. கவிராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழக நிர்வாகிகள் லோகு, செந்தில், இளங்கோ, தீபக், தனுஷ், லோகேஷ், பிரேம், சூர்யா, பால், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



















9 thoughts on “கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணங்கள்”
Comments are closed.