பரதநாட்டியத்தையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் இந்த புத்தகம் மிக முக்கிய பங்காற்றும் – கரியாலி

சரஸ்வதி கல்வி கலாச்சார மற்றும் தொண்டு அறக்கட்டளையுடன் மங்கள் தீர்த்த குழு மற்றும் ஈக்விடாஸ் வங்கி இணைந்து காபி டேபிள் புத்தக வெளியீட்டின் கோயில் நடனத்தின் மறுமலர்ச்சி (வசந்த் உத்சவ் – நடனத்தின் கொண்டாட்டம்) என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது.

இப்புத்தகம் முன்னாள் இந்திய ஆட்சிப் பணியாளர் Dr.C.K.கரியாலி, மற்றும் பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோரால் எழுதப்பட்டது.

இப் புத்தகத்தின் முதல் பிரதியை கேப்ளின் பாயின்ட் ஆய்வகங்கள் லிமிடெட் , தலைவர் சி.சி.பார்த்திபன் வெளியீட அபாய் தலைவர் கலைமாமணி ஸ்ரீமதி.ரோஜா கண்ணன் இப்பதக்கத்தில் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

மேலும் இவ்விழாவில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் ஸ்ரீ எஸ்.ஆர்.காந்தி, ஐஆர்பிஎஃப்எஸ், மற்றும் ஈக்விடாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ பி.என்.வாசுதேவன், மற்றும் சிதம்பரம் அகாடமி ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் நிறுவனர் பத்மஸ்ரீ ஸ்ரீமதி சித்ரா விஸ்வேஸ்வரன், மற்றும் அக்ஷயா ஆர்ட்ஸ் அகாடமியின் கலைமாமணி பினேஷ் மகாதேவன், மற்றும் கதகளி பயிற்சியாளர்ஸ்ரீ பிரபால் குப்தா உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

இவ்விழாவில் பேசிய கேப்ளின் பாயின்ட் ஆய்வகங்கள் லிமிடெட் , தலைவர் சி.சி.பார்த்திபன் கூறியதாவது:

கோவில்களில் நடைபெறும் பரதநாட்டியம் பற்றி இந்த புத்தகத்தில் விரிவாக எழுதி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். மேலும் ஒரு கலையை வளர்ப்பது எந்த அளவுக்கு முக்கியமோ,அந்த கலையை அதன் பழமை மாறாமல் அதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வது மிகவும் முக்கியம். இந்த பணியை இந்த புத்தகம் செய்திருக்கிறது என நம்புகிறேன். மேலும் பேசிய அவர் கோவில்களில் அரங்கேற்றப்படும் பரதநாட்டியதின் வரலாறு மிகவும் உணர்ச்சிகரமானது என்றும் கோவில்களில் அரங்கேற்றப்படும் பரதநாட்டியம் ஆனது அந்த கோவில்களில் இருக்கும் கடவுளுக்கும் நன்றி செலுத்துவதற்கு சமம் என கூறினார்.

இந்த புத்தகத்தை எழுதிய பிரியதர்ஷினி ராஜ்குமார் பேசுகையில்:

கோவில்களில் அரங்கேற்றப்படும் பரதநாட்டியம் குறித்து இந்திய மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைவரும் அறியும் வகையில் இந்த புத்தகத்தை தற்பொழுது ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறோம்.

கூடிய விரைவில் இந்த புத்தகத்தின் தமிழாக்கம் விரைவில் வெளியிடப்படும் என கூறினார். அதற்கான பணிகளை நாங்கள் தொடங்கி அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த புத்தகத்துக்கு பரதநாட்டியம் மட்டுமல்லாமல் குச்சிப்புடி போன்ற நடனங்களின் வரலாறையும் தெளிவாக நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம்.

நடனத்தையும் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் இந்த புத்தகம் மிக முக்கிய பங்காற்றும் என நாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.

மேலும் இவரது தலைமையில் ஆண்டுதோறும் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பரதநாட்டியம் அரங்கேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: ADmiNIstRAtoR

13 thoughts on “பரதநாட்டியத்தையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் இந்த புத்தகம் மிக முக்கிய பங்காற்றும் – கரியாலி

  1. Pingback: แผ่น HPMC
  2. Pingback: fox888
  3. Pingback: free cams
  4. Pingback: Huaysod

Comments are closed.