சென்னை பிப் 5, 2022: அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள் அதன் செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆதரவு கடிதத்தை வழங்கினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த இளமுருகு முத்து நிருபர்கள் கேள்விகளுக்கு பதில் அழைத்தார், அந்த பேட்டியில் மு.க .ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து திறம்பட செயல்பட்டு வருகிறது, கொரோன தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததிலும் சரி, தமிழ்நாடு பெரு வெள்ளத்தை சந்தித்தபோதும் சரி முதல்வர் அதை கையாண்டவிதம் பாராட்டுக்குரியது என்பதை இந்த நாடறிரும்.
அதேபோல் சமூக நீதியை நிலை நாட்டுவதிலும் தமிழக முதல்வர் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் அதற்க்கு சான்றாக மருத்தவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வாங்கிய தீர்ப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் 50 ஆண்டு கோரிக்கையான அண்ணல் அம்பேத்கருக்கு ஈரோட்டில் வெண்கல சிலை, தமிழ் தாத்தா அயோத்திதாச பண்டிதருக்கு மணி மண்டபம் என்று கூறிக்கொண்டே போகலாம். முக்கியமாக பட்ட மேற்படிப்பில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கும் உதவி தொகையை உயர்த்தியது, தாட்கோவில் வழங்கும் லோன்களுக்கு வருமான உச்சவரம்பை உயர்த்தியது என பட்டியலின மக்களுக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
அவரின் நல்லாட்சி தொடர உள்ளாட்சியிலும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை வெற்றிபெற செய்வது நம் கடைமையாகிறது. ஆதலால் முதல்வரின் தலைமையிலான தி.மு.க கூட்டணிக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் முழு ஆதரவை வழங்குகிறது. இவ்வாறு இளமுருகு முத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.





















14 thoughts on “உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் முழு ஆதரவு கடிதத்தை முதல்வரிடம் இளமுருகு முத்து வழங்கினார்”
Comments are closed.