மாணவர்களின் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான இடமாகத்தான் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் செயல்பட வேண்டும், தமிழ்நாட்டில் கல்வி வளாகத்தில் அரசியல் மற்றும் அரசியல் சார்ந்த செயல்களுக்கு அனுமதி கிடையாது,
மாணவர்களிடம் அனைத்து மக்களிடமும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான ஒரு பொதுத் தன்மையை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி முகாம்கள் நம் கல்வி வளாகத்தில் நடத்த வேண்டுமே தவிர பரஸ்பர காழ்ப்புணர்சியை வளர்க்கும் செயல்களை அனுமதிப்பது நாட்டின் அமைதியை சீர்குலைத்துவிடும்
சமீப காலமாகவே கல்லூரிகளில் சனாதான பயங்கரவாத அமைப்பான RSS-ன் ஊடுருவல் மிக அதிகமாகவே காணப்படுகிறது.
நேற்றைய தினம் தேனி மாவட்டம் வீரபாண்டி யில் அமைந்துள்ள சௌராஷ்டிரா அரசு உதவி பெரும் கல்லூரியில் Rss-ன் பயிற்சி வகுப்பு நடந்துள்ளது.
சாதி,மத பேதமின்றி மாணவர்கள் கல்வியை கற்கின்ற கல்லூரி அரங்குகளில் RSS-ன் மதவாத கொள்கையை திணிக்கும் வகையில் பயிற்சி முகாம்களை நடத்துவது சமூக நல்லிணக்கத்திற்கும், சமூக அமைதிக்கும் தீங்காக அமையும்.
சமூக நீதிக்கான அரசாக தன்னை தெரிவித்து கொண்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகம் அரசு, இந்த மாதிரியான மாணவர்களுக்கிடையே விஷத்தை விதைக்கும் கருத்துக்களை உருவாக்க முயற்சிக்கும் ஒரு இயக்கத்தின் வேலைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
தமிழ்நாடு அரசும்,கல்வித்துறையும் உடனடியாக இந்த பயிற்சி முகாம்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.
இவண்,



















11 thoughts on “கல்லூரிகளில் நடக்கும் RSS பயிற்சி முகாம்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் | மாணவர் இந்தியா மாநிலத் தலைவர் ஜாவித் ஜாஃபர் கோரிக்கை”
Comments are closed.