59-வது தேசிய கடல்சார் தினம் கொண்டாட்டம் 2022

  • அரசுக்கு இந்திய கடல் மாலுமிகள் நலச்சங்கம் கோரிக்கை!
  • கடல் மாலுமிகளுக்கு வ.உ.சி பெயரில் விருது!

சென்னை: இந்திய கடல் மாலுமிகள் நலச்சங்கத்தின் சார்பில் 59-வது தேசிய கடல்சார் தினம் கொண்டாட்டம் – 2022 சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு இந்திய கடல் மாலுமிகள் நலச்சங்கத்தின் தலைவர் முனைவர் பாபு மைலன் அவர்கள் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் செயலாளர் முனைவர் எஸ்.ஜெஸ்லின் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

மேலும் இந் நிகழ்வில் ஒரிசா மாநில முன்னாள் ஆளுநர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு தலைமைச் செயலாளருமான திரு.எம்.எம். ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா ராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, சமூக சேவை விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கி
கவரவித்தனர்

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்திய கடல்சார் முதன்மை அதிகாரி கேப்டன் அப்துல் கலாம் ஆசாத், ஆந்திர பிரதேசம் கடல்சார் வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரி கே.முரளிதரன், வணிக கடற்படை நலவாரிய தலைவர் ரூபன் பவுல், இந்திய கடல்சார் ஒன்றிய பொதுச்செயலாளர் அமர் சிங் தாக்கூர், கேப்டன் சங்கல்ப் சுக்தா,சென்னை துறைமுக துணை காப்பாளர் கேப்டன் மில்டன் ஆசிர்,வேல்ஸ் பல்கலைக்கழக இயக்குனர் கேப்டன் என்.குமார்,கேப்டன் வினீத் ஓ பாம்பன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கடல் மாலுமிகள் நலச்சங்கத்தின் தலைவர் முனைவர் பாபு மைலன் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கடல்சார் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை இந்திய கடல் மாலுமிகள் நலச்சங்கத்தின் சார்பில் நடத்தி வருகின்றோம்.

மாலுமிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கி உள்ளோம்.. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் கடல் மாலுமிகளை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு கடல் மாலுமிகளுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்…

Author: ADmiNIstRAtoR