மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் அவர்கள் நேற்று அந்தமான் மற்றும் வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் சின்னம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் தென் மேற்கு பருவமழை, முன் கூட்டியே 21.05.2021 அன்று துவங்க உள்ளது என்றும், 22.05.2021 அன்று, வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக அதிக வாய்ப்புள்ளதாகவும், பின்னர் இது தீவிரமடைந்து அடுத்த 72 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவாகக்கூடும் என்றும் , இந்த புயல் சின்னம் வடமேற்காக நகர்ந்து மேற்கு வங்கம் – ஒடிஷா கடற்கரையை 26.05.2021 அன்று சென்றடையும் என்றும், சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர் . இராமச்சந்திரன் அவர்கள் நேற்று மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு , புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இந்தக் கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் திரு. அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர், திரு. க. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் முனைவர் என்.சுப்பையன், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர் திருமதி.த.ஜெயஷீலா மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.





















22 thoughts on “மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு”
Comments are closed.