பாரதி மகளிர் கல்லூரியின் 58ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பரிசளிப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு

சென்னை: பாரதி மகளிர் தன்னாட்சி கல்லூரியின் 58 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பரிசளிப்பு விழா நிகழ்வு கல்லூரி திறந்தவெளி கலையரங்கில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி பேரவை ஒருங்கிணைப் பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான முனைவர் சு. தாரணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் டெ.கிளாடிஸ் அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு அனைத்து பாடப் பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தினர். இந்நிகழ்வின் இறுதியில் மாணவ பேரவை பொறுப்பாளர் பத்மபிரியா
நன்றியுரை நல்கினார்.

மேலும் இந்நிகழ்வில் அனைத்துத் துறைத் பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Author: ADmiNIstRAtoR

7 thoughts on “பாரதி மகளிர் கல்லூரியின் 58ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பரிசளிப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு

  1. Pingback: Web Hosting
  2. Pingback: kojic acid soap
  3. Pingback: find here

Comments are closed.