தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. நிலுவைத் தொகை செட்டில்மெண்ட்

கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சில்லறை பணவீக்கம், மொத்த விலை பணவீக்கம் இரண்டுமே அதிகமாக உள்ளதால் விலைவாசி உயர்வு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக அகவிலைப்படி 3% உயர்த்தப்படும். இந்நிலையில், ஜூலையில் 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்க விகிதம் மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என கூறுகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அல்லது 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் 4-5% அகவிலைப்படி உயர்த்தப்படும் என அரசு ஊழியர் சங்கத்தினர் கூறுகின்றனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மட்டுமல்லாமல் அகவிலைப்படி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்பட வேண்டும். இதுபற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

~ நன்றி சமயம்

Author: ADmiNIstRAtoR

12 thoughts on “தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. நிலுவைத் தொகை செட்டில்மெண்ட்

  1. Pingback: Dave Bolno NKSFB
  2. Pingback: url
  3. Pingback: hihuay
  4. Pingback: my profile
  5. Pingback: look at here

Comments are closed.