தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு மே 24ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆரம்பத்தில் காவல் துறையினர் விட்டுப்பிடித்த நிலையில் மக்கள் பாதிப்பை உணராமல் ஆளுக்கொரு காரணங்களைச் சொல்லி அங்குமிங்கும் சென்று வந்தனர். இந்நிலையில் இ பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இ பாஸ் முறை போன்று விண்ணப்பித்து ஒப்புதலுக்காக காத்திருக்க தேவையில்லை எனினும் இ பதிவு முறையில் திருமணம், இறப்பு, முதிய பெற்றோர்களை பேணுதல் போன்ற 4 காரணங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.
இதில் திருமணம் என்ற காரணத்தைச் சொல்லி பலரும் தவறாக இ பதிவு முறையை பயன்படுத்துவதால் அந்த ஆப்ஷன் மட்டும் நேற்று நீக்கப்பட்டது. பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆனால் மறுபடியும் அந்த முறை நீக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பதிவு முறை அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று காவல் எல்லையைக் கடந்து செல்ல இ பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 வரை வேறு வழியில்லை!
இந்த வார இறுதிக்குள் மருத்துவ வல்லுநர்கள், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அடக்கிய ஆலோசனைக் குழு, மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார். அதன்பின்னர் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகும். ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் பெரும்பாலான மருத்துவர்கள். தமிழக அரசும் இந்த பாதையில்தான் பயணிக்கும் என கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
~ நன்றி சமயம்





















7 thoughts on “ஜூன் 30 வரை முழு ஊரடங்கா?”
Comments are closed.