குட் பை ஐபிஎல் – அதிகரிக்கும் கொரானா பரவல், கடையை அடைத்தது பிசிசிஐ!

மிகவும் குறுகிய இடைவெளியில் நடந்த ஐபிஎல் சீசன் இதுவாக தான் இருக்கும். அரபு எமிரேக்கத்தில் சென்ற 2020 போட்டிகள் நடந்தன, இந்த கொடூர கொரோனா சூழலிலும் திட்டமிட்டபடி 2021ல் இந்தியாவில் போட்டிகளை துவங்கினர். ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண முடியாது, வீரர்கள் மற்றும் ஸ்டாப்களுக்கு பயோ பப்பில் வாழக்கை என கட்டுப்பாடுகள் அதிகம். மேலும் home -away என்றும் போட்டிகள் கிடையாது. குறிப்பிட நகரங்களில் மட்டுமே மேட்ச் என திட்டம் போட்டது நிற்வாகுழு

ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் பயோ பப்பில் பிடிக்கவில்லை, இந்தியா இருக்கும் இந்த சூழலில் போட்டிகள் தேவையா என விலகினர். எனினும் பாதி சீசன் முடிவு அடைந்துவிட்டது. இந்நிலையில் கொல்கத்தா டீம்மின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியாருக்கு கொரானா தொற்று உறுதியானது எனவே நேற்றயை பெங்களூரு – கொல்கத்தா போட்டி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் சென்னை டீமின் CEO காசி விசுவநாதன், பௌலிங் கோச்சு லக்ஷ்மிபதி பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் என சி எஸ் கே தரப்பில் மூவருக்கு பாதிப்பு ஏற்பட்டது நாம் அறிந்த விஷயமே

டெல்லி காப்பிடல்ஸ் டீமின் அமித் மிஸ்ரா இருவருக்கும் கொரானா பாதிப்பு இருப்பது இன்று உறுதி ஆகியுள்ளது.

எனவே இன்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் மற்றும் பிசிசிஐ உயர்மட்ட குழு கலந்து ஆலோசித்து போட்டிகளை நிறுத்திவிட முடிவு செய்துள்ளனர். வீரர்கள், ஸ்டாப் மற்றும் பிரான்சைஸ் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளனர். பின்னர் மாற்று தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை

~ நன்றி சினிமாபேட்டை

Author: ADmiNIstRAtoR

7 thoughts on “குட் பை ஐபிஎல் – அதிகரிக்கும் கொரானா பரவல், கடையை அடைத்தது பிசிசிஐ!

  1. Pingback: buy rifles online
  2. Pingback: live videos

Comments are closed.