நரிக்குறவ தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளை வீட்டில் சிறைபிடித்து வைத்திருந்த அதே சமூகத்தை சேர்ந்தவரிடமிருந்து இரு பெண் சிறுமிகளை மீட்ட போலீசார் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில் வசித்து வரும் துர்கப்பா(30) புஷ்பா(25) நரிக்குறவ தம்பதிகளுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். 

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு துர்கப்பா, வடிவேல் உள்ளிட்ட 5 பேர் ட்ரை சைக்கிளில் வியாபாரம் காரணமாக சென்றுள்ளனர். அப்பொழுது ட்ரை சைக்கிள் விபத்துக்குள்ளானபோது வடிவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

தனக்கு காயம் ஏற்பட்டதற்கு காரணம் நீதான் என துர்கப்பாவை குற்றம்சாட்டி மருத்துவ செலவிற்கு ரூபாய் 2 லட்சம் கொடுக்க வேண்டும் என வடிவேல் கேட்டுள்ளார். 

பணம் கொடுக்க முடியாததால் துர்கப்பாவின் 9-வயது மகள் துர்கா, 6-வயது மகள் தீபிகா இரு பெண் குழந்தைகளையும் வடிவேல் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

குழந்தைகளை திருப்பி கொடுக்க வேண்டும் என்றால் பணம் கொடுத்துவிட்டு அழைத்து செலுங்கள் என கூறி கடந்த ஒரு வருடமாக வடிவேல் துர்கப்பாவின் இரு பெண் குழந்தைகளையும் வடிவேலுவின் நாவலூரில் உள்ள வீட்டில் சிறைபிடித்து வைத்துள்ளார். 

துர்கப்பாவின் இரு பெண் குழந்தைகளையும் வடிவேல் ஓஎம்ஆர் சாலையில் பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. 

இச்சம்வம் குறித்து பதிக்கப்பட்ட நரிக்குறவ தம்பதியினர் சென்னை பனையூரில் உள்ள ஏர்ரம்மாள் அறக்கட்டளை உரிமையாளரிடம் உதவி நாடியபோது அரக்கட்டளையை சேர்ந்த சேகர், சமூக ஆர்வலர் மோனிஷ்வரன் இருவரும் குழந்தைகளை மீட்க காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் தலைவர் இராமசந்திரனிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இராமச்சந்திரன் ஆலோசனையின்படி தாழம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் நாவலூரில் நரிக்குறவர்கள் வசிக்கு இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது வடிவேல் வீட்டில் துர்கப்பாவின் இரு மகள்கள் இருந்ததை உறுதி செய்தனர். 

பின்னர் அங்கு நடத்திய விசாரணையில் துர்கப்பாவின் இரு பெண் குழந்தைகளும் கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிறைபிடித்து வைத்திருந்ததும், இரு பெண் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைத்து கொடுமைபடுத்தியதும் தெரியவந்தது. 

வடிவேல் வீட்டில் சிறைபிடிக்கப்பட்டிருந்த இரு பெண் குழந்தைகளையும் மீட்ட உதவி ஆய்வாளர் உதயகுமார் தாழம்பூர் காவல் நிலையத்தில் வைத்து பெற்றோரிடம் குழந்தைகளை ஒப்படைத்தனர். 

இன்று மாலை 3 மணியளவில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், ஏடிஜிபி சீமா அகர்வால், சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் ஐஏஎஸ் லால் வீனா தலைமையில் காணமல்போன குழந்தைகளை மீட்டெடுப்பதற்காக ஆப்ரேஷன் ஸ்மைல் என்ற தலைப்பில் ஒரு குழு அமைத்துள்ளனர். குழு அமைத்த இரண்டு மணி நேரத்தில் பெற்றோரை விட்டு பிரிந்து சென்ற இரு பெண் குழந்தைகளை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடதக்கது. 

பேட்டி:- 1.துர்கப்பா(குழந்தைகளின் பெற்றோர்). 2.சேகர்,(எர்ரம்மாள் அறக்கட்டளை).

Author: ADmiNIstRAtoR

13 thoughts on “நரிக்குறவ தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளை வீட்டில் சிறைபிடித்து வைத்திருந்த அதே சமூகத்தை சேர்ந்தவரிடமிருந்து இரு பெண் சிறுமிகளை மீட்ட போலீசார் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்

  1. Pingback: www exness
  2. Pingback: beach bunnies
  3. Pingback: x4rich
  4. Pingback: suicide bombing

Comments are closed.