தொற்றுநோய் காரணமாக மே 3 வரை நடந்துவரும் ஊரடங்கு, நாடு முழுவதும் கல்வி முறையில் ஓர் இடைவெளியை உருவாக்கியுள்ளது.
இந்தக் கட்டத்தில், மாணவர்கள் தங்கள் கற்றல் பணியைத் தொடர வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இ-கற்றல் (ஆன்லைன்) வகுப்புகள் நடத்தி வருகிறது.
ஆன்லைன் கல்வித் திட்டங்களில், வீடியோக்கள், ஆன்லைன் விரிவுரைகள், தொடர்பு மற்றும் தூண்டுதல் சந்தேகம் தெளிவுபடுத்தும் அமர்வுகள், டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் சமீபத்திய முறைகள் மூலம் பணிகள் மற்றும் பணித்தாள்களைப் பகிர்வதன் மூலம் ஆசிரியர்கள் பாடங்களை விளக்குகிறார்கள்.
மற்ற நாட்களைப் போலவே பல மணி நேரங்களும் கற்றல் நடவடிக்கைகள் மற்றும் வீட்டுப் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து கல்வியைக் கற்க எளிதாக இருப்பதால் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.
பாடங்களைத் திறம்பட வழங்குவதற்காக ஆன்லைன் திறன் அடிப்படையிலான பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு அமர்வுகள் அனுபவம் பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.
“வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் உள்ள டிஜிட்டல் கற்றல் தளம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், குழந்தைகள் வீட்டிலிருந்தே கற்றல் திறனை வளர்த்துக்கொள்ள இது வழிவகுத்துள்ளது” என பெற்றோர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்: 8056063519
8 thoughts on “வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தில் மின்வழிக் கற்றல் அமைப்பு”
Comments are closed.