மார்ச் 31 முதல் உலகமெங்கும் ரிலீசாகும் “ஜம்பு மஹரிஷி“ திரைப்படம்

டி.வி.எஸ்.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பி.பாலாஜி — பி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜம்பு மஹரிஷி’. இந்தப் படத்தில் புதியவரான பாலாஜி நாயகனாகவும், ‘மஸ்காரா’ புகழ் அஸ்மிதா நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், ‘பாகுபலி’ பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிரபல இயக்குநரான பகவதி பாலா இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சிவசங்கர் நடன பயிற்சியையும், டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சி இயக்கத்தையும், ராஜ் கீர்த்தி படத் தொகுப்பையும், பி.புவனேஸ்வரன்,வசந்த சுபத்ரா வசனத்தையும் எழுதியுள்ளனர். ‘தேனிசை தென்றல்’ தேவா இசையமைக்க பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ் மூவரும் பாடல்களை எழுதி உள்ளனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரமாண்டமான செலவில் உருவாக்கப்பட்ட ஜம்பு மஹரிஷி திரைப்படம் உண்மை தன்மையை அடிப்படையாகக் கொண்டது. அதர்மம் தோன்றும்போதெல்லாம் ஜம்பு மஹரிஷியால் தோற்றுவிக்கப்பட்ட ருத்ரவீரன் தோன்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவான் என்பதை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து பி-தனலட்சுமியுடன் இணைந்து தயாரித்துள்ள புதியவரான பி.பாலாஜி இதை தன் முதல் படமாக இயக்கி உள்ளார். திருச்சி அருகே திருவானைக்காவலில் ஜீவ சமாதி அடைந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றோடு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் காசி, ஊனமாஞ்சேரி, திருவண்ணாமலை, யகாண்டி, அகோலம், ஆந்திரா கோல் கொண்டாபேலஸ், ஹைதராபாத் ஆகிய இடங்களில் 120 நாட்களில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 முதல் உலகமெங்கும் ரிலீசாகிறது.

Author: ADmiNIstRAtoR

12 thoughts on “மார்ச் 31 முதல் உலகமெங்கும் ரிலீசாகும் “ஜம்பு மஹரிஷி“ திரைப்படம்

  1. Pingback: judi slot
  2. Pingback: ufabtb
  3. Pingback: Study in Africa
  4. Pingback: sell weapons
  5. Pingback: Junk search engine
  6. Pingback: car detailing
  7. Pingback: 789bet

Comments are closed.