கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுபொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தொண்டு நிறுவனம்..!
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கினால் ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.
சென்னை டான்சி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான மளிகை, அரிசி ஆகியவை வழங்கப்பட்டது.
டான்சிநகர் நலவாழ்வு சங்கம் சார்பில், ஊரடங்கு துவங்கிய நாள் முதல், வேளச்சேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, காலையில் உணவு வழங்குகின்றனர். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினர். அது போல, பொது மக்களுக்கு கபசுர குடிநீர், கிருமி நாசினி, முக கவசம் வழங்கப்பட்டன.
8 thoughts on “டான்சி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது”
Comments are closed.