தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில் நீண்ட நாள்‌ நிலுவைக்‌ கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி கோரிக்கைகள்

சென்னை 13.09.2024:

1. 2006 லிருந்து நிலுவையிலிருக்கும்‌ தலைமை ஆய்வக நுட்பனர்‌ (CHIEF TECHNICAL OFFICER) பதவி உருவாக்கும்‌ நடைமுறை கோப்பினை இறுதிசெய்து ஆய்வக நுட்பனர்‌ நிலை II பிரிவினருக்கு இரண்டாம்‌ கட்டபதவி உயர்வு பதவியை நிரப்பிடுக! மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக
நலப்பணிகள்‌, ஒருங்கிணைந்த இந்திய முறை மருத்துவம்‌, மற்றும்‌ அனைத்து இயக்ககப்‌ பிரிவிலும்‌ CTO பதவிகளை உருவாக்கிடுக!

2. பிப்ரவரி 2021ல்‌ அறிவிக்கப்பட்ட II புதிய மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ மருத்துவமனைகளுக்காக
அறிவிக்கப்பட்டுள்ள 500க்கும்‌ மேற்பட்ட நிலை II ஆய்வக நுட்பனர்கள்‌ ஒப்பந்த பணி நியமனத்தை முற்றிலும்‌ கைவிட்டு. கால முறை பணியிடங்களாக அரசாணை வெளியிட்டு தேர்வாணையம்‌ மூலம்‌ சமூக நீதி பாதுகாப்புடன்‌ இட ஒதுக்கீடு அடிப்படையில்‌ பணிநியமனம்‌ செய்திடுக! ஆய்வக நுட்பனர்‌ நிலை II காலிப்பணியிடங்களை நிரப்பிடுக!

3. ஈரோடு பெருந்துறை மருத்துவக்‌ கல்லூரி அரசு மருத்துவக்‌ கல்லூரி, மருத்துவமனையாக கடந்த 2019ல்‌ மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இங்கு (01.04.2003) முன்பாக பணியாற்றிய ஆய்வக நுட்பனர்‌ உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கானவர்களை பொது சேமநல நிதிக்‌ GPF கணக்கில்‌ இணைக்காமல்‌ ஓய்வூதியம்‌ உள்ளிட்ட சலுகைகள்‌ நாளதுவரை கிடைக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி ஒய்வூதியம்‌ உள்ளிட்ட உரிமைகளை வழங்கிடுக!

4. 01.04.2003 க்கு முன்னர்‌ வேலை நியமனத்‌ தடை அமலிலிருந்தபோது ஒப்பளிக்கப்பட்ட நிரந்தர பணியிடங்களில்‌ அரசாணை 1577ன்‌ படி பணிநியமனம்‌ பெற்ற ஆய்வக நுட்பனர்‌ நிலை II, ஆய்வக உதவியாளர்‌ அனைவரையும்‌ பணியேற்ற நாளிலிருந்து பணி வரன்‌ முறை செய்திடுக!

5. 1999 க்குப்‌ பிறகு உருவாக்கிடப்பட்ட அனைத்து மருத்துவக்‌ கல்லூரி மருத்துவ மனைகளில்‌ உள்ள மொத்த நிலை II நுட்பனர்‌ பணியிடங்களில்‌, அரசு ஏற்றுக்‌ கொண்டபடி 40 சதவீத பணியிடங்களை நிலை | ஆக தரம்‌ உயர்த்திட நிலுவையிலுள்ள கடித எண்‌ 98843/E5/ நாள்‌: 29.12.2018 ஸ்படி நடவடிக்கை எடுத்திடுக.

6. நிலை III, நிலை III, நிலை I ஆய்வக நுட்பனர்களுக்கு அரசாணை 131ன்‌ படி காலிப்பணியிடங்கள்‌ பட்டியல்‌ வெளியிட்டு மாறுதல்‌ கலந்தாய்வு நடத்திடுக!

7. கோவிட்‌ பெருந்தொற்றுக்கான ஊக்கத்‌ தொகையினை சென்னை மருத்துவக்‌ கல்லூரி, ஆய்வக நுட்புனர்கள்‌ உள்ளிட்ட வழங்கப்படாத ஆய்வக தொழில்நுட்ப ஊழியர்‌ அனைவருக்கும்‌ உடனடியாக வழங்கிடுக!

8. ஆய்வக நுட்பனர்‌ நிலை II க்கான ஒரு தொகுதிமுறை அமலாக்கத்தை முழுமைப்படுத்திடுக! நிலை I பதவி உயர்வு பதவி உயர்வு கலந்தாய்வினையும்‌ முழுமைப்படுத்திடுக! நிலை III மற்றும்‌ நிலை I பணி மூப்பு தகுதி பட்டியல்‌ வெளியிடுக!

9. ஆய்வக நுட்பனர்‌ நிலை III பதவிக்கான பணி நியமன விதிகளில்‌ உரிய திருத்தம்‌ செய்திடுக! பட்டய படித்தவர்களுக்கு நேரடி நியமனம்‌ 70 சதவீதமும்‌, இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 5 சதவீதமும்‌, நிலை III பிரிவிலிருந்து 25 சதவீதமும்‌ ஒதுக்கீடு செய்து: அரசாணை 39ல்‌ திருத்தம்‌ செய்திடுக!

10. அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ ஆய்வுக்‌ கூட்ட முடிவின்‌ வரையறைப்‌ படி 30
உள்நோயாளர்களுக்கு ஒரு சிப்டுக்கு ஒரு ஆய்வக நுட்பனர்‌ என்ற கருத்துருவிற்கு
இயக்ககங்களின்‌ கூட்டுக்‌ கூட்டம்‌ நடத்தி 24 மணி நேர ஆய்வக அரசாணை வெளியிட்டு, நிலை II மற்றும்‌ நிலை I ஆய்வக நுட்பனர்‌ பணியிடங்கள்‌ உருவாக்கிடுக!

11. மத்திய அரசில்‌ உள்ளது போன்று ஆய்வக நுட்பனர்‌ நிலை II ஐ ஆய்வக வல்லுனர்‌ (LABORATORY TECHNOLOGIST) என்றும்‌, நிலை I ஐ தொழில்நுட்ப மேற்பார்வையாளர்‌ (TECHNICAL SUPERVISOR) என்றும்‌, தலைமை ஆய்வக நுட்பனர்‌ உருவாக்கும்‌ கோப்பினை இறுதி செய்து தலைமை தொழில்‌ நுட்ப அலுவலர்‌ என்றும்‌ பெயர்‌ மாற்றம்‌ செய்திடுக!

12. தற்போது பணியிலிருக்கும்‌ நிலை III மற்றம்‌ நிலை I நுட்பனர்களின்‌ பணி மூப்பு முதநிலை வரிசைப்‌ பட்டியல்படி இரண்டாண்டு கால நிர்ணயத்தில்‌ BSC MLT பயிற்சியினை (LATERAL ENTRY) அனைத்து மருத்துவக்‌ கல்லூரிகளிலும்‌ வழங்கிடுக.

13. BSC MLT பயிற்சினை சென்னை மருத்துவக்‌ கல்லூரி கீழ்பாக்கம்‌ மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ பயிற்சி நடைமுறையில்லாத மருத்துவக்‌ கல்லூரிகளிலும்‌ துவங்கிடுக DMLT, BSC MLT மாணவர்களுக்கு உணவு மற்றும்‌ தங்கும்‌ விடுதி வசதி ஏற்படுத்திடுக! பயிற்சி நிறைவில்‌ வழங்கப்படும்‌ (INTERNSHIP) உள்ளிருப்பு பயிற்சிக்கான உதவித்‌ தொகை வழங்கிடுக

14. நிர்வாக காரணங்களால்‌ நிரப்பப்படாமல்‌ இருந்த, ஆய்வக மேற்‌ பார்வையாளர்‌, விளக்குனர்‌, நிலை I, நிலை III ஆய்வக நுட்பனர்கள்‌ காலிப்பணியிடங்களை காலாவதிப்பட்டியலில்லிருந்து விலக்களித்து அனைத்துப்‌ பணியிடங்களையும்‌ நிரப்பிடுக! மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறையில்‌ காலாவதிப்பணியிடங்கள்‌ நடைமுறையை முற்றிலும்‌ கைவிடுக!

15. இரத்த வங்கிகளுக்கு ஆய்வக நுட்பனர்‌ பணியிடங்கள்‌ 24 மணி நேர சுழற்சி முறை உட்கட்டமைப்பு ஏற்படுத்திடுக! பணியிடங்கள்‌ ஏற்படுத்தும்‌ வரை ஏற்கனவே உள்ள
நடைமுறைகளை தொடர்ந்திடுக!!

16. சென்னை மாநகராட்சியில்‌ ஆய்வக நுட்பனர்‌ நிலை I, தலைமை தொழில்‌ நுட்ப அலுவலர்‌ பதவிகளை உருவாக்கிடுக.

17. திண்டுக்கல்‌ அரசு மருத்துவக்‌ கல்லூரி, தலைமை மருத்துவமனை DPH ஆய்வக நுட்பனர்களின்‌ பணியிடங்களை திண்டுக்கல்‌ அரசு மருத்துவக்‌ கல்லூரியோடு இணைத்திடுக ! மாவட்டங்கள்‌ புதிதாக உருவாக்கப்பட்டதாலும்‌, தலைமை மருத்துவமனை மருத்துவக்‌ கல்லூரிகளாக மாற்றப்பட்ட மாவட்டங்களிலும்‌ மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உட்கட்டமைப்பு ஆய்வக நுட்பனர்‌ நிலை II, நிலை I பணியிடங்களை உருவாக்கிடுக!

18. கணினி வழிப்பதிவிற்கும்‌, முடிவுகள்‌ அறிவிப்பதற்கும்‌ தரவு உள்ளீட்டாளர்கள்‌ பணியிடமின்றி கட்டாயப்‌ படுத்துவதாலும்‌, இணைய வழிக்‌ குறைபாடுகளாலும்‌, ஆய்வகத்தின்‌ பணிகளிலும்‌, நோயாளர்களுக்கு ஏற்படும்‌ இடர்பாடுகளையும்‌ தவிர்த்திடும்‌ வகையில்‌ தரவு உள்ளீட்டாளர்கள்‌
மற்றும்‌ ஆய்வக நுட்பனர்கள்‌ பணியிடங்கள்‌ உருவாக்கிடுக!

19. மருத்துவ பணியாளர்‌ தேர்வாணையம்‌ போதுமான நிரந்தர பணியாளர்களின்றி செயல்படுவதால்‌ பணிநியமனங்கள்‌ தாமதமாகிறது. நிரந்தர பணியாளர்கள்‌ ஏற்படுத்திடவும்‌, அரசாணை 401ன்‌
மூலம்‌ மதிப்பெண்‌ தரவரிசையில்‌ பணி நியமனங்கள்‌ செய்வதற்குப்பதிலாக எழுத்து தேர்வு மூலம்‌, காலிப்பணிடங்கள்‌ ஏற்படும்‌ போது வருடத்திற்கு இரண்டு முறை பணி நியமனங்கள்‌ செய்திடுக

20. தமிழ்‌ நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர்‌ சங்க வேண்டுகோளின்படி வெளியான அரசாணை 417/2009ன்‌ படி மாநில அளவிலான-நுட்பனர்‌ கவுன்சில்‌ நடைமுறைப்படுத்திடுக.

வீ.பார்த்தசாரதி, மாநிலப்‌ பொதுச்செயலாளர்‌

Author: ADmiNIstRAtoR