CSK சூப்பர் ஃபேன்ஸுக்காக சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் ‘ரெடி மடி அடி’ ஃபேன் ஆன்தம்-ஐ வெளியிட்டது

உற்சாகமளிக்கும் இந்த ஆன்தம் CSK ரசிகர்களை #ஸ்ட்ராங்காவிசில்போட ஊக்குவிக்கிறது

பிரச்சாரத்திற்கான லிங்க் : https://www.youtube.com/watch?v=V9q-egmwWO8

சென்னை, 18 மே, 2023: ITC ஃபுட்ஸின் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் பிஸ்கட்ஸ், ‘ரெடி மடி அடி’ என்கிற சுவாரஸ்யமான ஃபேன் ஆன்தம்-ஐ, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் பட்டாளத்தின் கட்டுக்கடங்காத ஆர்வத்தையும் அளவுக்கடந்த அன்பையும் கொண்டாட வெளியிட்டுள்ளது. முழு வீச்சில் உள்ள சீசனில், சூப்பர் கிங்ஸ் ஸ்ட்ராங்கான பெர்ஃபார்மன்ஸை பதிவு செய்துள்ள நிலையில், சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் பிஸ்கட், CSK ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிக்கு தங்கள் ஆதரவைக் காட்ட புதிய வழியை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. துள்ளலான இசையில் உருவாக்கப்பட்ட இந்த ஆன்தம், CSK ரசிகனாக இருப்பதன் சாரத்தை உள்ளடக்கிய ஒரு மனம் கவரும் உற்சாகமான பாடலாகும்.

விளையாட்டின் உண்மையான உணர்வை உள்ளடக்கிய இந்த ஆன்தம்-ஐ, சென்னையைச் சேர்ந்த Mind Your Language! என்ற கிரியேட்டிவ் ஏஜென்சி பாடல் வரிகள் எழுத, தென்மா பாடி இசையமைத்துள்ளார். இந்த ஆன்தம் CSK உடனான பிராண்டின் பார்ட்னர்ஷிப் மற்றும் #StrongaaWhistlePodu என்ற முழக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த சீசனில், CSK அணிக்காக சாதாரண விசில் போடாமல், ஸ்ட்ராங் மில்க் பிஸ்கட் சாப்பிட்டு, ஸ்ட்ராங் விசில் போடுமாறு சூப்பர்மில்க் ரசிகர்களை ஊக்குவிக்கிறது.

திரு. அலி ஹாரிஸ் ஷேர், தலைமை இயக்கு அதிகாரி, பிஸ்கட் & கேக்ஸ் கிளஸ்டர், உணவுப் பிரிவு, ITC லிமிடெட், ஆன்தம்-ஐ அறிமுகப்படுத்தியது குறித்துப் பேசுகையில், “CSK-யின் ரசிகர்களைக் கொண்டாடும் வகையில், சன்ஃபீஸ்ட்  சூப்பர்மில்க்-இன் ஒரு முயற்சிதான் ‘ரெடி மடி அடி’ ஆன்தம்.  நுகர்வோருடன் ஆழமான தொடர்பை உருவாக்கி, எங்கள் #StrongaaWhistlePodu” பிரச்சாரத்தை மேலும் வலுவாக்க இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்தம் CSK அணி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.

இந்த ஆன்தம்-ஐ தனது தனித்துவமான ஸ்டைலில் பெர்ஃபார்ம் செய்துள்ள, பிரபல டிரம்மரான சிவமணி பேசுகையில், “நான் முதல் சீசனில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரும் ஆதரவாக இருந்து வருகிறேன். ஒரு சூப்பர் ஃபேனாக, ‘ரெடி மடி அடி’ ஆன்தம் மூலம் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் உடன் பார்ட்னராக சேர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு கவர் பதிப்பை உருவாக்கும் அளவிற்கு, இந்த ஆன்தம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நானும் ஒரு ஸ்ட்ராங்கான விசில் மூலம் CSK-வை உற்சாகப்படுத்த தயாராக உள்ளேன்!” என்று கூறினார்.

மோஜ் பிளாட்ஃபார்மில் ஹேஷ்டேக் சேலஞ் உடன் இந்த ஆன்தம் மேலும் பிரபலம் செய்யப்படுகிறது. சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க், CSK உடன் இணைந்து அதன் அனைத்து சமூக ஊடக சேனல்களிலும் இந்த ஆன்தம்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆன்தம்-ஐ பயன்படுத்தி கன்டன்ட் உருவாக்க CSK ரசிகர்களான சரவணன், சிவமணி போன்ற பிரபலங்களையும் ஈடுபடுத்தியுள்ளது.

Author: ADmiNIstRAtoR