எஸ்ஆர்எம் ல் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி பரிசு வழங்கினார்

காட்டாங்கொளத்தூர், 4 செப் 2019: எஸ்ஆர்எம் ல் நடைபெற்ற மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி பரிசுகள் வழங்கினார். காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் சிந்தடிக் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அண்மையில் எஸ்ஆர்எம் கல்வி குழுமங்களின் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் திறந்து வைத்தார். அதில் மாநில அளவிலான  டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் ஆண்கள் பெண்கள் என தனித் தனியாகவும் இரட்டையர்கள் மற்றும் கலப்பு இரட்டையர்களாகவும் நடைபெற்றது. இதில் தனியாக 64 பேரும், இரட்டையர்கள் 20 பேரும் , கலப்பு இரட்டையர் 12 வீரர்களும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி பரிசு வழங்கினார். இதில் விளையாட்டு இயக்குனர் முனைவர் வைத்தியநாதன் பங்கேற்றார்.

Author: ADmiNIstRAtoR

9 thoughts on “எஸ்ஆர்எம் ல் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி துணைவேந்தர் முனைவர் சந்தீப் சன்சேத்தி பரிசு வழங்கினார்

  1. Pingback: 뉴토끼
  2. Pingback: find out here now
  3. Pingback: Taxi To Koh Chang
  4. Pingback: lamborghini

Comments are closed.