அத்தியாவசியப் பொருட்களான அரிசி மளிகை 500 பேருக்கு வழங்கப்பட்டது

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கினால் ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக தலித் மக்கள் முன்னணி கட்சியின் சார்பில் சென்னை சூளைமேடு பகுதியில் இருக்கும் 500 மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி மளிகை, ஆகியவை வழங்கப்பட்டது.

கட்சியின் நிறுவனர் தலைவர் நெல்லை மணி அவர்கள் வழங்கினார்கள். இவர்களுடன் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Author: ADmiNIstRAtoR

11 thoughts on “அத்தியாவசியப் பொருட்களான அரிசி மளிகை 500 பேருக்கு வழங்கப்பட்டது

  1. Pingback: lsm99live.net
  2. Pingback: Dan Helmer
  3. Pingback: chobreview.com
  4. Pingback: junk listings
  5. Pingback: เฟสไก่
  6. Pingback: happyluke
  7. Pingback: live chat

Comments are closed.