21 ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் மக்கள் சேவை செய்த பிகே குரூப்ஸ், அறக்கட்டளையாக இன்று துவங்கியது

சென்னை, 2 ஜனவரி 2022: திராவிட முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா இந்த அறக்கட்டளையை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணைஆணையர் கே. தனபாலன் காவல்துறை ஆய்வாளர்கள் எஸ்.பூமாறன் பழவேசம், திராவிட முன்னேற்ற கழக மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் ,கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளர் கே. கண்ணன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ. துரைராஜ் மற்றும் பலர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் பி.கே அறக்கட்டளையின் தலைவர் பி.கே.குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாளர் எஸ் .சி.மதிவாணன், துணைச் செயலாளர் எம். பாபு , துணைத்தலைவர்கள் எஸ்.என்.சுந்தர்ராஜன், பி.கே.பிரவீன் குமார், துணைப்பொருளாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் தலைவர் பி.கே.குமார் பேசுகையில் 21ஆண்டு காலமாக தனிப்பட்ட முறையில் ஒரு குழுவாக செயல்பட்டு பல நலத்திட்ட உதவிகளை வழங்கிவந்த நிலையில் , தற்போது பி. கே. குரூப்ஸ் அறக்கட்டளை என்ற பெயரில் முழுவீச்சுடன் சமூக நலப்பணிகளை செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்த அறக்கட்டளை நோக்கமானது கல்வி மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவுவது உணவு அளிப்பது ஆகும். கடந்த 2015 பெருவெள்ளத்தின் போது நெசப்பாக்கம், சூளைப்பள்ளம், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி காய்கறி உணவு என 3000 க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டது .

இனிவரும் காலங்களில் இதேபோன்று பள்ளி உதவி தொகை, பேரிடர் காலங்களில் நல திட்ட உதவி வழங்குவது போன்ற பல நலத்திட்டங்களை மக்கள் பணியாக செய்வது என முடிவெடுக்கப்பட்டு உள்ளோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Author: ADmiNIstRAtoR