சமூக நீதி சத்ரியப் பேரவை, சத்திரியர் சேனா அமைப்பின் சார்பாக ஆலோசனைக் கூட்டம்

சமூக நீதி சத்ரியப் பேரவை, சத்திரியர் சேனா அமைப்பின் சார்பாக சென்னை கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க (ஆர். வி டவர் ) வளாகத்தில் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் சத்ரிய சமூக தலைவர்கள் பெயரில் விழா எடுத்தல் மற்றும் தொழில் முனைவோர் தொழில் செய்ய ஊக்கமளித்தல், சட்ட ஆலோசனை வழங்குதல் அதற்கான சமூக சேவை மையம் துவக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

சமூகநீதி சத்திரிய பேரவையின் மாநில இணைப் பொதுச்செயலாளர் எஸ். எம். குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவரும் சமூக நீதி சத்ரிய பேரவை தலைவருமான பொன் குமார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமூக தலைவர்கள், வரலாற்று நாயகர்கள் விழாவை கொண்டாடுவது பற்றியும் தொழில் முனைவோர் நலன் குறித்தும் பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பொறியாளர் சுப்பிரமணி, பாஸ்கர் கேசவன், பானு கோபன், மோகன்ராஜ், பொறியாளர் வெங்கடேஷ், கருத்து காமராஜ், எஸ்.எஸ். பி.சசிகுமார், ஆர். கே. சாமி, ஆர் .குணசேகரன், பொன். ஏழுமலை நாயக்கர், ஆவடி விஸ்வநாதன், வடசென்னை வீரா, எம் . கண்ணன் மாநில மகளிரணி சென்னை விஜயலட்சுமி, வேலூர் கஸ்தூரி மற்றும் சமூக நல ஆர்வலர்கள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மகளிர் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR