‘நவராத்திரி -2019 விற்பனை கண்காட்சியினை” மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்

சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நவராத்திரி – 2019 விற்பனைக் கண்காட்சியினை இன்று (18.09.2019) மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ். பி. வேலுமணி அவர்களும், மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் அவர்களும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்களும் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்டனர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறும் தமிழக அரசு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டியும், அதனை முறையாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது. அதில் ஒருபகுதியாக மகளிர் சுய உதவிக் குழுவினரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கிராம அங்காடிகள், கல்லூரி சந்தைகள், வட்டார், மாவட்ட, மாநில அளவிலான கண்காட்சிகள் மற்றும் தேசிய அளவில் சாராஸ் கண்காட்சிகள் வாயிலாக ஆண்டுதோறும் விற்பனை செய்வதற்கு ஏதுவாக பல்வேறு விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் ஏராளமான மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதோடு, வாடிக்கையாளர்களும் தரமான பொருட்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

அதன்படி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக தற்போது துவக்கி வைக்கப்பட்ட “நவராத்திரி-2019 விற்பனைக் கண்காட்சியில் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்தும் 120 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டுள்ளனர். அக்குழுக்களின் சார்பாக 55 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில், பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பட்டு, பருத்தி ஆடைகள், கைவினைப் பொருட்கள், மண்பாண்டப் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பல்வேறு உலோகங்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள், தரமான வீட்டு உபயோகப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஒலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பல்வேறு தோல் பொருட்கள், நவராத்திரி கொலு பொம்மைகள், வாசனைப் பொருட்கள், மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள், பாரம்பரிய கிராமிய உணவு வகைகள், அனைவருக்கும் ஏற்ற தரமான ஆயத்த ஆடை வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் இக்கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சி 2019 செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்.

‘தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இதுவரையில் 2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்திட எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மாநில அளவில் 19 விற்பனை கண்காட்சிகள் மூலம் 2562 மகளிர் சுய உதவிக்குழுக்கள் ரூ.839.35 இலட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்து பயனடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை வெளி மாநிலங்களில் நடைபெற்ற 91 கண்காட்சியில் 2727 சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ரூ.728.35 இலட்சம் மதிப்பில்் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2012ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட 741 கல்லூரி சந்தைகள் மூலம் 16,911 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டு ரூ.1,143.74 லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து பயனடைந்து உள்ளனர். தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 127 மதி விற்பனை அங்காடிகள் நிறுவப்பட்ட அவ்வங்காடிகள் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டதில் ரூ.705.80 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம், 2011ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக இதுவரையில் 851 விற்பனை கண்காட்சிகள் மூலம் 22,327 மகளிர் சுய உதவிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ரூ.3,417.24 இலட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது சிறப்பிற்குரியது. மேலும், உள்ளூர் விழாக்கள், அரசு பொது நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக அன்பனை செய்திட தமிழ்நாடு அரசு

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திருமதி. பா. வளர்மதி அவர்கள், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை திரு. வி. என். ரவி அவர்கள், தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. சத்யநாராயணன் அவர்கள், ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் / முதன்மைச் செயலர் திரு. ஹன்ஸ்ராஜ் வர்மா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. பிரவீன் பி. நாயர், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் முதன்மை செயல் அலுவலர் திருமதி. சு. ப. கார்த்திகா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் முனைவர் ஜெ. யு சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் இயக்குநர்கள் திரு. பா. செல்வராஜன், திரு. ஜா. சம்பத், திரு. ஜெ. கணேஷ் கண்ணா , திரு. சி. கே, வீரணன், திருமதி. சரஸ்வதி கணேசன் மற்றும் இணை இயக்குநர்கள், பொது மேலாளர், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR

12 thoughts on “‘நவராத்திரி -2019 விற்பனை கண்காட்சியினை” மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்

  1. Pingback: 늑대닷컴
  2. Pingback: launch

Comments are closed.