சென்னை, பிப்ரவரி 28, 2024: சென்னையில் உள்ள முன்னணிக் கல்வி நிறுவனமான அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, பிப்ரவரி 28 அன்று 2024 ஆம் ஆண்டின் தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாடியது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வரும், விஞ்ஞானியுமான
டாக்டர் வி.ஜி. வைத்தியநாதன், இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, அறிவியல் ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மேம்பாடு மற்றும் நிபுணத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், விஞ்ஞான அறிவு மற்றும் ஆய்வுச்சிந்தனையுடன் உள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி மாணவர்கள் பெரும்பான்மையோர் பங்கேற்றனர்.
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின், இயற்பியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்ந்த மாணவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பறைசாற்றும் முகமாய் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இதில் லேசர் பாதுகாப்பு அலாரம், பார்வையற்ற நபர்களுக்கான அல்ட்ராசோனிக் (மிகையொலிக் கண்ணாடிகள்) கண்ணாடிகள், ஒரு வழிக் கண்ணாடி, நியோடைமியம் காந்தங்களைப் பயன்படுத்தும் V6 இயந்திரம், (V வடிவில் உள்ள ஆறு சிலிண்டர் பிஸ்டன் எஞ்சின்), குரல் கட்டுப்பாட்டில் இயங்கும் சக்கர நாற்காலி, இணைய உலகம் சார்ந்திருக்கும் பொருட்கள் – போன்ற 65 புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. இந்த அறிவியல் ஆய்வுகள் அறிவியலின் எல்லைகளை மறு ஆய்வு செய்யுமுகமாக அமைந்திருந்தன.
தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓர் அங்கமாக விளங்கும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வரும், விஞ்ஞானியுமான டாக்டர் வி.ஜி. வைத்தியநாதன் கூறுகையில், “அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் நடைபெறும் தேசிய அறிவியல் தின விழா, இயற்பியல் மற்றும் மின்னணுவியல் துறைகளில் உள்ள இளம் அறிவியல் விஞ்ஞானிகளின் அபார ஆற்றல் மற்றும் புதுமையான அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் தளமாக உள்ளது.
மாணவர்களின் அறிவியல் ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ள அர்ப்பணிப்புணர்வும் படைப்பாக்கப் திறனும் எதிர்காலத்தில் அறிவியல் துறையில் ஏற்படப் போகும் மிகப்பெரும் வளர்ச்சியை எதிரொலிக்கிறது.
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி மாணவர்களிடையே உள்ள அறிவியல் ஆர்வமும் அர்ப்பணிப்புணர்வும் என்னை வெகுவாக நெகிழ வைத்துள்ளது.
மேலும் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிகள் எதிர்கால அறிவியல் உலகத்திற்குத் தேவையான குறிப்பிடத்தக்க தம் பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறேன்.
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியின் புலத்தலைவர், டாக்டர் எம். எம். ரம்யா, அவர்கள் கூறுகையில், 2024 ஆம் ஆண்டின் “தேசிய அறிவியல் தின விழா” கொண்டாட்டம் எங்கள் மாணவர்களிடையே அறிவியல் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புச் சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற கல்லூரியின் முன்னெடுப்புகளைப் பிரதிபலிக்கிறது. எங்கள் இளம் விஞ்ஞானிகளின் படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்புணர்வு கண்டு நாங்கள் மிகவும் பெருமிதமடைகிறோம். மேலும் அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்தந்த துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
கல்லூரி மாணவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளை வெளிப்படுத்தவும் எதிர்கால சந்ததியினரிடையே அறிவியலின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இந்நிகழ்வு அமைந்தது.”தேசிய அறிவியல் தின விழா” எங்கள் மாணவர்களின் அசாத்திய சாதனைகளை வெளிப்படுத்துவதோடமட்டுமல்லாமல், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மாணவர்களிடையே விஞ்ஞான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகப்பெரும் கவனம் செலுத்துகிறது என்பதைப் பறைசாற்றுவதாகவும் விளங்குகிறது.
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி பற்றி:
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி பற்றி:எஸ்.எஸ்.ஜெயின் கல்விக் குழுமத்தின் வாயிலாக அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி 1952 இல் பத்மஸ்ரீ மோகன்மல்ஜி சோர்டியாவால் நிறுவப்பட்டது. ஆண்களுக்கான கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி 2003 –இல் இருபாலரும் கற்கக்கூடிய கல்வி நிறுவனமாகத் தரம் உயர்த்தப்பட்டது. இன்று 9000+ மாணவர்களுடன் 30 இளங்கலை மற்றும் இளம் அறிவியல், 8 முதுகலை மற்றும் முதுஅறிவியல் பட்டப்படிப்புகளை வழங்கக்கூடிய கல்வி நிறுவனமாகத் தரவரிசையில் முன்னணி வகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் உருவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி தன் உயர்தர வழிகாட்டுதலின் மூலம் ஒழுக்கமும் அறிவும் ஒருங்கே பெற்ற எதிர்கால மாணவத் தலைமுறையை வடிவமைத்து வருகிறது.
For further information, please contact:
R. Sricharan | Adfactors PR | r.sricharan@adfactorspr.com | 9842904567
Haarivignesh P | Adfactors PR | haarivignesh.p@adfactorspr.com | 7010332576




















