அகிலத்தை ஆள அகவை தேவையில்லை என்பதற்கிணங்க, இளம் வயதிலேயே சாதனைக் களத்தில் கரை காணத் தொடங்கியிருக்கிறார் மாஸ்டர் அம்ருத் வர்ஷன்

மக்கள் நீதி மய்யத் தலைமையகத்தின் மாநிலச் செயலாளரான திரு.சரத்பாபு ஏழுமலை அவர்களின் தவப்புதல்வனான இவர், 12-12-21 அன்று ஏஷியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக சென்னை அசோக் நகர் 10வது அவென்யூவில் அமைந்துள்ள ஹோட்டல் சரவண பவனின் ராஜா – ராணி ஹாலில் 195 நாடுகளின் தேசியக் கொடி, அவை அமைந்துள்ள கண்டம், அதன் தலைநகரம் என நாடுகளின் அத்தனை தகவல்களையும் நொடிப்பொழுதில் எடுத்துச் சொன்னார்.

அத்துடன் வரைபடத்தில் அவற்றின் இருப்பிடங்களையும் அடையாளம் காட்டி நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வாய் பிளக்க வைத்துவிட்டார்.
இந்தச் சிறு வயதிலேயே மிகப்பெரிய சாதனைப் படைக்கப் பின்னணியாக இருந்த பெற்றோர் சரத்பாபு ஏழுமலை – ரம்யா தம்பதியினரை நிகழ்ச்சியில் வாழ்த்தாதோர் இல்லை.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக , மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் கவிஞர் S.சினேகன், மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் திரு.முரளி அப்பாஸ், Ace Panacea Life skills Pvt. Ltd-n மேலாண்மை இயக்குநர் திரு. இன்ஸ்பையரிங் இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு மாஸ்டர் அம்ருத் வர்ஷனுக்கு வளமான எதிர்காலம் காத்திருப்பதாக வாயார வாழ்த்தினர்.
அசத்துங்க அம்ருத்!

Author: ADmiNIstRAtoR

12 thoughts on “அகிலத்தை ஆள அகவை தேவையில்லை என்பதற்கிணங்க, இளம் வயதிலேயே சாதனைக் களத்தில் கரை காணத் தொடங்கியிருக்கிறார் மாஸ்டர் அம்ருத் வர்ஷன்

  1. Pingback: adderall kopen
  2. Pingback: 늑대닷컴
  3. Pingback: webpage
  4. Pingback: โคเวย์

Comments are closed.