இழந்ததை மீட்டுத் தரும் கார்த்த வீர்யார்ஜூனர்

பகவான் ஸ்ரீ ஸஹஸ்ரார்ஜுனர்

குலம் தடை தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியம். குலதெய்வ மாக வணங்கும் கடவுள் கள் பெரும்பாலும் அவ தாரமாகவோ, மனிதனராகவோ மண்ணில் பிறந்து, நமக்கு வழிகாட் டியாக, நம்மை காப்பதற்காக வாழ்ந்தவர்களே.

குலதெய்வமாக இல்லா விட்டாலும் பல கடவுள் களின் பிரார்த்தனைகள், பரிகாரங்கள் நம் சங்கடங்களை நிவர்த்தி செய்ய ஆண்டவனால் அடையாளம் காட்டப்பட்டவை.

கலியுகத்தில் சொத்துக்களை இழப்பது, பொருட்கள் திருடு போவது, குடும்பத்தில் உள்ளவர் கள் பிரிந்து போவது, இளம் வயதில் சாவின் விளிம்பிற்குச் செல்லும் அளவு நோய்வாய்ப்படுவது சகஜமாகிவிட்டது. இப்படி இழந்ததை மீட்டுத் தரும் வல்லமை உடைய தெய்வம் கார்த்த வீர்யார்ஜூனர்.

கிருதயுகத்தில் சத்ரிய வம்சத்தில் ஹேஹய நாட்டில் மகிஷ மதியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கிருதவீரன் – பத்மி னிக்கு பிறந்தவர், கார்த்த வீர்யார் ஜூனர். இவர் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகப் பிறந்தவர்

தத்தாத்ரேயரை குருவாக ஏற்று
கடும் தவம் புரிந்து அநகா லக்ஷ்மி விரதம் இருந்து பல சக்திகளை வரமாக பெற்றார்

நினைத்தபோது ஆயிரம் கரங் களைப் பெறும் வல்லமை மேலும் மகாவிஷ்ணுவைத் தவிர வேறு எவராலும் மரணம் ஏற்படாத வரத்தையும் பெற்றவர்.

இவர் 85 ஆயிரம் ஆண்டுகள், மூன்று உல கங்களையும் இந்த பொருளும் தொலைந்து போகாமல் ஆண்டதாக புராணங் கள் சொல்கின்றன.

ராமாயணத்தில் ராவணனை பற்றி குறிப்பிடும் பொழுது, கார்த்த வீர்யார்ஜூனர் ராவணனோடு போரிட்டு வெற்றி பெற்றதாக ஒரு குறிப்பு உள்ளது.

இராவனை வென்றதினால் இராவணஜித்தன் பாகுபலி என்ற சிறப்பு பட்டத்தையும் பெற்றவர்.

ஐயப்பனின் 18 படிகளில் 7-ம் படியாக கார்த்த வீர்யார்ஜூனர் இருப்பதாகவும், குருவின் சொல் கேட்டு சாஸ்தா வழிபாடு செய்ததாகவும் சொல்லப் படுகிறது.

காம தேனு பசு முனிவரிடம் இருப்பதை காட்டிலும் மன்னரிடமிருந்து இருந்தால் நாட்டு மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதி காமதேனுவை பொது சொத்தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஜமதக்னி முனிவர் ரின் இச்சை இல்லாமல் காமதேனுவை கவர்ந்து சென்றார்,

கார்த்த வீர்யார் ஜூனர். இதனால் விஷ்ணுவின் அவதாரமான ஜமதக்னி முனிவ ரின் மகன் பரசுராமருடன் போரிட நேர்ந்தது. இதில் பரசுராமரால் கொல்லப்பட்டு முக்தி மோட்சம் அடைந்தார் கார்த்திவீரியர்ஜுனார்.

தன் நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்காக போரிட்டதால், அவரை காக்கும் கடவுளாக திகழ மகாவிஷ்ணு அருள்பாலித்தார்.

மேலும் மரணம் கண் முன் தெறிந்தாலும் பின் வாங்குவது க்ஷத்ரியருக்கு அழகல்ல என்று பரசுராமரிடம் போறிட்டு முக்தி மோட்சம் பெற்றத்தினால் இனி வரும் காலங்களில் க்ஷத்ரிய குலங்களுக்கு குல தெய்வமாகவும்
குல குருவாகவும் இருந்து அருள்வாய் என்ற வரம் பெற்றார்.

கார்த்த வீர்யார்ஜூனருக்கு மூலக் கோவில் மத்திய பிரதேசம் மகேஸ்வரர் என்ற இடத்தின் அருகே அகல்யாபாய் கோட்டை யில் நர்மத்தை நதி கரையில் உள்ளது.

சுதர்சனர் தன்னால் தான் மஹா விஷ்ணுவிற்கு சக்ராஆயுத பாணி என்று பெயர் வந்தாதாக ஆணவத்துடன் கூற

கோவப்பட்ட பெருமாள் பக்த சுதர்சனா இவ்வளவு ஆணவம் அகங்காரம் கொண்ட உனக்கு வைகுண்ட தில் இடம் இல்லை என்று சாப்பிக்கிறார்.

தன் தவறை உணர்ந்து சுதர்சனர் இந்த சாபதிற்கு முக்தி பாவ விமோட்சணம் கேட்கிறார்.

அதற்கு மஹா விஷ்ணு நீ உனது முழு பலத்துடன் என்னுடன் புலோகத்தில் போறிடுவாய் நான் உன்னை பரசுராமராக அவதாரித்து உன்னை வென்று உனக்கு முக்தி மோட்சம் தருகிறேன் என்றார்.

தமிழகத்தில் கும்ப கோணம் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள சேங்காலிபுரம் ஆலயத்திலும் இவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது.

வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில், பச்சைக் கல் லில் கார்த்த வீர்யார்ஜூனர் திரு மேனி அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்வாமி மலை முருகர் கோவிலை கட்டி முருகபெருமனை தரிசித்த வாறே வீற்றிருக்கிறார் மேலும்
அங்கு வரும் பக்தர்களுக்கு மரண பயம் நீக்கி அருள் புரிகிறார் ஸ்ரீ கார்த்த வீரியர்ஜுனார்.

செங்கல்பட்டு மாவட்டம் குரு தட்சனா மூர்த்தி கோவிலில்லும் அருள் பலிக்கிறார்.

108 பெருமாள் கோவிலில் தாடிகொம்பு சந்தராஜ் ஜ பெருமாள் கோவிலிலும் அருல்பாலிக்கிறார்.

திருநெல்வேலி ஹரி சிவன் கோவிலிலும் கள் துணில் இருந்து அருள்கிறார்.

சிவகங்கை அருகே சொக்கம்பட்டி ஸ்ரீ உக்கிற பிராத்தியன்கிறா தேவி கோவிலில் தனி சன்னதி உள்ளது இவருக்கு.

மேலும் காஞ்சிபுரம்
சேக்குப்பேட்டை யில் ஸ்ரீ விட்டல் ருக்குமானி பாண்டுரங்கன் கோவிலிலும் அமைய பெற்றுள்ளார்.

செவ்வாய் அல்லது புதன்கிழமை களில் நம்பிக்கையுடன் பூஜை. ஹோமம் செய்து, கார்த்த வீர்யார் ஜூனரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும், இழந்த சொத்து, தொலைந்த பொருள், பிரிந்து சென்ற உறவுகள், நலிந்த உடல் ஆரோக்கியம், அடகு வைத்த நிலம், நகை அனைத்தும் கிடைப் பது திண்ணம். கலியுகத்தில் காக் கும் கடவுளாக மனிதனின் மனக் குழப்பத்தை தீர்க்கும் வகையில் அருள்பாலிக்கும் கார்த்த வீர்யர் ஜூனரை வணங்கி ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற கீழே உள்ள சுலோகத்தை சொல்லுங்கள்.

‘ஓம் கார்த்த வீர்யாய வித்மஹே மஹா சூஷ்மாய தீமஹி

தந்நோ ஸ்ர்ஜுநஹ் ப்ரசோதயாத்’.

Author: ADmiNIstRAtoR