புதிதாய் பிறக்கும் இந்த 2022- ஆம் வருடப் புத்தாண்டை மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் வரவேற்போம்.
இந்த இனிய புத்தாண்டில் மனை வணிகம் சிறந்து விளங்கிடவும், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் எழுச்சியோடு வளர்ந்திடவும், அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடையும் ஆண்டாகவும் இந்த ஆண்டு அமையட்டும்.
இந்த புதிய ஆண்டு அனைத்துத் தரப்பு மக்களும் அன்பு, சகோதர மனப்பான்மை மற்றும் சகிப்புத்தன்மையுடன் சாதி, மத, இன, மொழி பேதமின்றி சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு ஏற்றச் சூழல் நிறைந்த ஆண்டாக அமையட்டும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, தன்மானத்தோடும் சுய கௌரவத்தோடும் வாழ அவர்களின் வாழ்வில் ஒளிவெள்ளம் ஏற்படட்டும்.
வளர்ச்சியும், மகிழ்ச்சியும் மக்களுக்குக் கிடைப்பதற்குத் துணை நிற்கின்ற ஆண்டாகவும் இந்த ஆண்டு அமையட்டும்.
அதுபோலவே, தமிழகம் தன் அருமை பெருமைகளை மீண்டும் உறுதியுடன் நிலைநிறுத்திக் கொள்ளவும், சமூகநீதி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளைப் போற்றிப் பாதுகாத்திடவும், சட்டம் ஒழங்கைப் பாதுகாத்து, நாட்டில் உள்ள மாநிலங்களில் தொழில் வளர்ச்சி, கலாச்சாரம், பண்பாடு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை அடையும் மாநிலமாக தமிழகம் மாறுவதற்கும் இந்தப் புத்தாண்டு நிச்சயம் உரிய வழிவகுக்கட்டும்.
வரும் 2022 புத்தாண்டில் மக்கள் அனைவரும் எல்லா நலமும், எல்லா வளமும், எல்லா நாளும் பெற்று பெரும் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், எல்லா நிறைவோடும் வாழவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி,
மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த 2022- ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்..
ஆ.ஹென்றி.,
நிறுவனர் – தலைவர்,
FAIRA-AIJMNP.



















13 thoughts on “அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) மற்றும் அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் (AIJMNP) சார்பில், அதன் நிறுவனர் – தலைவா் ஆ.ஹென்றி அவர்கள் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி”
Comments are closed.