நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். மாண்புமிகு முதலமைச்சருடன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர் பாபு, மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகர மேயர் திருமதி. பிரியா ராஜன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி, திரு. வி. க. நகர் மற்றும் மாதவரம் சட்ட மன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எஸ். சுதர்சனம் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த மாண்புமிகு முதலமைச்சர் 30-ம் ஆண்டு நினைவு பெயர் பொறிக்கல்லை திறந்து வைத்தார். மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 18 மாணவ மாணவியர் மற்றும் பல ஆண்டுகளாக எவர்வின் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தார்.
மேலும், எவர்வின் பள்ளிக் அறக்கட்டளை சார்பாக தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்களின் குழந்தைகள் மேம்பாட்டுக்காக ரூ. 5 இலட்சம் மதிப்பிலான காசோலையை மாண்புமிகு முதலமைச்சர் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் எவர்வின் பள்ளிக் குழுமத்தின் சி. இ. ஓ. மகேஸ்வரி, தாளாளர் புருஷோத்தமன் இயக்குனர்கள் வித்யா, முரளி ஆகியோர் உடனிருந்தனர்.



Everwin Group of Schools, Everwin School, Chennai Everwin School, MK Stalin, Chennai Glitz





















17 thoughts on “சென்னை எவர்வின் பள்ளிக் குழுமத்தின் 30-ம் ஆண்டு விழா”
Comments are closed.