சென்னை அடையாறில் உள்ள இளைஞர் விடுதியில் எட்டாம் ஆண்டு மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு கோஜு ரியூ கராத்தே பள்ளியின் தலைவர் சிவராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அடையாறு சரக காவல் உதவி ஆணையர் நெல்சன், தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் மாநில தலைவர் நாகராஜன், ஓம் ஷக்தி பார்மஸி பாஸ்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இதில், தமிழகத்தின் 22 மாவட்டங்களிலிருந்து சுமார் 450 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். வீரர்களின் வயது மற்றும் எடை அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் மாநில தலைவர் நாகராஜன் சான்றிதழ், கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.





















9 thoughts on “மாநில அளவிலான கராத்தே போட்டிகள் சென்னையில் நடைபெற்றது”
Comments are closed.