ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளரை ஆதரித்து 500 கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றதால் ஸ்தம்பித்த சாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வருவதை அடுத்து பல்வேறு கட்சியைச் சார்ந்த வேட்பாளர்கள் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் லட்சுமி காந்த் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் பிரேம்குமாரை ஆதரித்து அதிமுகவினர் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் .
ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர்
கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பை தொடங்கிய அதிமுகவினர்
அதனைத் தொடர்ந்து ஆதம்பாக்கம் நங்கநல்லூர் கரிகாலன் தெரு வாணுவாம்பேட்டை பேபி நகர்
அம்பேத்கர் திடல் உள்ளிட்ட
தெருக்களில் திறந்தவெளி வேனில் நின்றவாரு 500க்கும் மேற்பட்ட இரு
சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது
பின்னர் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியும் ரோஸ் மில்க் கலக்கி கொடுத்தும் இரட்டை இலைக்கு வாக்களித்து அதிமுக மக்களவை வேட்பாளர் பிரேம்குமார் வெற்றி பெற செய்யுமாறும் வாக்கு சேகரித்தனர்




















