அகம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் 275 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

சென்னை, 24 நவம்பர் 2024: சென்னை மடிப்பாக்கம் மாமன்னர் மருது பாண்டியர் மாளிகையில் அகம் கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அதிக மதிப்பெண் பெற்ற
275மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி ஊக்கத்
தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளைகள் தலைவர் ஜி. இராவணன், எஸ்.ராஜரத்தினம் ஐஏஎஸ் (ஓய்வு) , எஸ். வனிதா ஐபிஎஸ் (ஓய்வு), பி.செந்தில் வேலன் ஐ ஆர் எஸ் உறுப்பினர்/வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மேலும் குரூப் 4, ஆர் ஆர் பி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர்,
அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையினை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தலைவர் ஜி. இராவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த சங்கமானது 1958 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு அது முதல் சமுக குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் வழங்கி வருகிறோம். அதன் மூலம் சமுக குழந்தைகள் கல்வி பயில உதவி செய்து வருகிறோம்.

இந்த ஆண்டு 275 குழந்தைகளுக்கு இந்த மண்டபத்தின் வருவாய் மற்றும் நன்கொடை மூலமாக வசூல் செய்து ரூபாய் 12 லட்சம் அளவில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்
பட்டது, அடுத்த ஆண்டு முதல் மாவட்டம் தோறும் சங்க நிர்வாகிகளை ஊக்குவித்து அவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் 1000 குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் செய்வது சிறு உதவியாக இருந்தாலும் அவர்களுக்கு பேரு உதவியாக இருக்கும். நாங்கள் குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் முறை தாய் தந்தை இல்லாதவர்கள், அரசு பள்ளியில் பயில்கின்ற மாணவர்கள், மேலும் அவர்களின் மதிப்பெண் ஆகியவற்றை இணைத்து மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம்.

எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமான மறைமலை நகரை அடுத்த செங்குன்றத்தில் 10 ஏக்கர் நிலத்தில் ரோபோட்டிக் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கு வழிவகை செய்ய முயற்சி செய்து வருகிறோம். இங்கு வழங்கப்படுகின்ற கல்வி ஊக்கத்தொகை 4000 முதல் 10,000 ஆகும் என்றார்.

உடன் அகமுடையார் கல்வி மற்றும் அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜி. ரமேஷ்குமார், அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் செயலாளர் லயன்.எ.சரவணன், அகம் கல்வி மற்றும் அறக்கட்டளை எஸ். அன்பழகன், அகம் கல்வி அறக்கட்டளை பொருளாளர் வி.தயாநிதி, அகமுடையார் கல்வி மற்றும்
அறக்கட்டளை பொருளாளர் கே.வில்வகுமார், அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்க பொருளாளர் எல்ஐசி கே.கணேசன், அகமுடையார் கல்வி மற்றும் அறக்கட்டளை அறங்காவலர் சேலம் எம்.குமார், திருமதி எஸ்.செல்வி சுப்பிரமணியன், செல்வி கே.மோகன பிரியா கணேசன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் அறங்காவலர்கள் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் & அகமுடையார் கல்வி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR