செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமையில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சங்பரிவார் அமைப்புகளை கண்டித்து அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான அம்பேத்கர் மக்கள் இயக்க நிர்வாகிகள், 5 க்கும் மேற்பட்ட முஸ்லீம் அமைப்புகள், திராவிட கட்சிகள் கலந்துகொண்டு இஸ்லாமிர்களுக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்தும், கர்நாடகத்தில் கடந்த வாரம் நடந்த ஹிஜாப் கலவரத்தை கண்டித்தும் கோஷம் போட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் அப்துல் கனி, SDPI மாவட்ட தலைவர் சலாலுதின், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் நிஜமுதீன், திராவிட முன்னேற்ற கழக இதயததுல்லா, அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் ப.தங்கவேலு, பொருளாளர் ரா. பழனிச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியின் முடிவில் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமை உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Author: ADmiNIstRAtoR

17 thoughts on “செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமையில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

  1. Pingback: Study in Africa
  2. Pingback: Relex smile
  3. Pingback: blote tieten
  4. Pingback: ริช88
  5. Pingback: klik dultogel
  6. Pingback: free cams
  7. Pingback: Diyalaa
  8. Pingback: free deals

Comments are closed.