டெல்லியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் கண்களை மூடிக்கொண்டு மூன்று நிமிடம் சிலம்பம் சுற்றி அசத்தல்

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு

சிலம்ப விளையாட்டை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அங்கீகரித்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை

புதுடில்லியில் உள்ள மதர் தெரசா உள் விளையாட்டு அரங்கில் பாரம்பரியம் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் 3 நிமிடம் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது

டெல்லி,மும்பை தெலுங்கானா, ஹரியானா,கேரளா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 650 மாணவர்கள் தங்கள் கண்களை கட்டிக்கொண்டு 3 நிமிடம் பல்வேறு பிரிவுகளில் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்

இந்த உலக சாதனையை அங்கீகரிக்கும் விதமாக “பாரம்பரியம் வேர்ல்ட் ரெக்கார்ட்” சார்பில் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுனை அடுத்து இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த சிலம்ப ஆசிரியர்கள் அமைப்புகள் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

தேசிய பொது செயலாளர் விஜயன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் தனராஜ் அவர்கள் கலந்துகொண்டு உறுதுணையாக இருந்த சிலம்ப ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசையும் பதக்கங்களையும் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தலைவர் தன்ராஜ் பேசுகையில்:-

தேசிய அளவில் முதல் அங்கீகாரத்தை பெற்றது இந்த பாரம்பரிய சிலம்ப கூட்டமைப்பு

தேசிய மற்றும் சர்வதேச சிலம்ப போட்டியை நடத்த அங்கீகாரம் பெற்ற அமைப்பு

அங்கீகாரம் பெற்றவுடன் எங்கள் சார்பில் டெல்லியில் நடைபெற்ற முதல் உலக சாதனை போட்டி இது

எந்த நுழைவு கட்டணமும் இன்றி இலவசமாக தேசியம் முழுவதும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர் என பேசினார்

இதனையடுத்து பேசிய தேசிய செயலாளர் விஜயன்:

நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னெவென்றால் இதுவரையில் சிலம்பரத்திற்கு அங்கிகாரம் கொடுக்காமல் உள்ளனர் ஆனால் இனிமேல் அது நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்

பின்னர் பேசிய பொருளாளர் சண்முகம்:

எங்களை போன்ற ஆசிரியர்கள் இதற்கான அங்கிகாரம் பெறுவதற்கு போராடித்தான் கொண்டிருக்கிறோம்.ஆனால் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை

அரசு 3 சதவிகிதம் கொடுத்து இருந்தாலும் எங்கள் மானவர்களுக்கு சொல்லி கொல்லும் அளவிற்கு நன்மை நடைபெறவில்லை

எனவே மாநில அரசு கருத்தில் கொண்டு அவர்கள் நடத்தும் சிம்.டிராபி உள்ளிட்ட போட்டிகளில் எங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையமும் தமிழக அரசும் எங்களை அங்கிகரிக்குமாரு கேட்டுக்கொள்கிறோம்.

இதுவரையில் இந்திய அளவில் முதல் முறையாக இலவசமாக போட்டியை நடத்தியுள்ளோம்

Author: ADmiNIstRAtoR