எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொது கூட்டத்தில் சாலையின் நடுவில் பட்டாசுகளை வெடித்த அதிமுகவினரால் கிண்டி வேளச்சேரி சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேளச்சேரி
காந்தி சாலையில் அதிமுக சார்பில்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆஇஅதிமுக சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது
இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக வேளச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் கலந்து கொண்டார்
இந்நிலையில் அவரை வரவேற்பதற்காக அதிமுகவின் சார்பில் சாலையில் பட்டாசு வெடிக்கப்பட்டது
அப்பொழுது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லக்கூடிய முக்கிய சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது
இந்த நிலையில் காந்தி சாலை சந்திப்பில் உள்ள சிவசக்தி செல்வ கணபதி ஆலயத்தில் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக சுமார் இரண்டு அடுக்கு கட்டிட அளவிற்கு கோவில் மற்றும் சாலையை மறைத்தவாறு வரவேற்பு பதாகை வைத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
மேலும் மத வழிபாட்டு தலங்கள் மீதும் அல்லது அதனை ஒட்டியோ கட்சி மற்றும் பிற மதம் சார்ந்த பதாகைகள் வைக்கக்கூடாது என்று இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் கோவில் மீது விளம்பரம் செய்தது இந்து உணர்வாளர்களிடையே கடும் அதிரிப்தியை ஏற்படுத்தியது
மேலும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த செயல் கட்சி மேலிடம் கவணிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது




















