ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS), சென்னையில் உள்ள தனது கல்வி வளாகத்தில் இன்று, இந்திய-ருமேனிய நட்புறவை வலுப்படுத்தும் விதமாக ஒரு சிறப்புரை நிகழ்வையும் மற்றும் அதி நவீன ஸ்டுடியோ தொடக்க விழா நிகழ்வையும் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது.
இந்நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் விதத்தில் அமைந்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினரான, இந்தியாவுக்கான ருமேனிய தூதர் மேதகு திருமதி. சேனா லத்தீஃப் அவர்களும் மற்றும் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கான ருமேனியாவின் தூதரக அதிகாரி டாக்டர் விஜய் மேத்தா, திரைப்பட இயக்குநரும், சமூக சேவகருமான டாக்டர் சஞ்சனா ஜான் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.
இந்நிகழ்வில் ஹிந்துஸ்தான் பல்கலையின் மூத்த நிர்வாக அதிகாரிகளான இணை வேந்தர் டாக்டர் அசோக் ஜார்ஜ் வர்கீஸ் மற்றும் துணை இயக்குனர் திரு எனிட் வர்கீஸ் ஜேக்கப், ஆகியோர் கலந்து கொண்டனர்




















