உலகமெங்கும் தமிழக மக்கள் வாழுமிடமெல்லாம் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் தொப்பி வாப்பா பிரியாணியின் கிளை நிறுவனமான கோழி.இன் (kozhi.in) இன்றைய இளைஞர்களின் விருப்ப உணவுகளான பர்கர், சான்விச், டார்டில்லா, மொஜிட்டோ, பிரைடு சிக்கன் போன்ற அட்டகாசமான உணவுப் பட்டியலை கொண்டது.
இந்நிறுவனம் தன்னுடைய இரண்டாவது கிளையை பல அதிரடி சலுகைகளுடன் சென்னை திருவான்மியூரில் உள்ள IMPCOPS மருத்துவமனை அருகே திறந்துள்ளது.

கிளையை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினரான முனைவர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் திறந்து வைக்க சிறப்பு விருந்தினர்களாக திரு.துரைகபிலன் (வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.க), திரு.J.M.H அசன் மௌலானா MLA (வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர், திமுக), பாலவாக்கம் திரு.த.விஸ்வநாதன் MC (சென்னை மாநகராட்சி கல்விக் குழு தலைவர் ), திருமதி.விசாலாட்சி கபிலன் MC, திருமதி.கயல்விழி ஜெயகுமார் MC, திருமதி.M.ராதிகா MC, செல்வி.துரை சுபாஷினி MC ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளை உரிமையாளர் திரு.ம.லெனின் உடனிருக்க அவருடைய தந்தை திரு.மொ.கோ.மணி அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று உரையாற்றினார்.
திரு.S.ஜெயகுமார் (181 வது வட்ட கழக செயலாளர், திமுக) அவர்களின் நன்றியுரையோடு திறப்பு விழா இனிதே நிறைவுற்றது.
திறப்பு விழா சலுகை 18 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை இரண்டு வாரங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



















9 thoughts on “தொப்பி வாப்பா பிரியாணியின் கிளை நிறுவனமான கோழி.இன் (kozhi.in) திருவான்மியூரில் உள்ள IMPCOPS மருத்துவமனை அருகே திறக்கப்பட்டுள்ளது”
Comments are closed.