சென்னை பல்லாவரம் அடுத்த வேல்ஸ் பல்கலைகழத்தில் தேசிய அளவிலான புகைப்பட போட்டி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 64 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 269 புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றது. அவற்றை மாநாடு திரைப்படத்தின் புகைப்பட கலைஞர் ரிச்சர்ட் நாதன் மற்றும் முனிஸ் பழனியப்பன் ஆகியோர் ஆய்வு செய்து சிறந்த புகைப்படங்களை தேர்வு செய்தனர். இதில் முதல் 3 சிறந்த புகைப்படங்களை எடுத்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழஙகி கவுரவிக்கப்பட்டனர். அப்போது பேசிய அவர், மாணவர்கள் படிப்போடு மட்டும் நின்று விடாமல் தனி திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் சினிமாவில் ஏராளமான வாய்ப்பு உள்ளன. அவைகள் உங்களை தேடி வரும் என பேசினார்.


















15 thoughts on “மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி தனி திறமை வளர்த்துகொண்டால் சினிமாவில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக மாநாடு படத்தின் புகைப்பட கலைஞர் ரிச்சர்டு நாதன் தெரிவித்துள்ளார்”
Comments are closed.