குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்காக – சென்னை ரேடியன்ஸ் ரோட்டரி சங்கம் நடத்தும் ரேடியன்ஸ் பிரீமியர் லீக் சீசன் 3

ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3233-ஐ சேர்ந்த சென்னை ரேடியன்ஸ் ரோட்டரி சங்கம், தனது முதன்மை நிகழ்வான ரேடியன்ஸ் பிரீமியர் லீக் (RPL) சீசன் 3 ஐ நடத்தியது

ரோட்டரி மாவட்டங்கள் 3233 மற்றும் 3234-ஐ சேர்ந்த சுமார் 60 ரோட்டரி சங்கங்களைச் சேர்ந்த 128 ரோட்டேரியன்கள் இந்த பேட்மிண்டன் திருவிழாவில் பங்கேற்றனர்
8 அணிகளாக பிரிந்து சென்னை கொரட்டூரில் உள்ள ஸ்மாஷ் போன்ஸ் மைதானத்தில் போட்டிகள் நடைப்பெற்றது

இந்த ஆண்டு RPL சீசன் 3 குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான செலவுகள் போக மீதமுள்ள நிதி, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு உயிர் காக்கும் மருத்துவக் கருவி வாங்கி வழங்கப்படும்.

நட்புறவையும் விளையாட்டையும் சமூக சேவையுடன் இணைக்கும் ரோட்டரியின் நோக்கத்தை இந்த தொடர் பிரதிபலிக்கிறது.

இந்த போட்டி தலைவர்
S. புருஷோத்தமன், செயலாளர் லக்ஷ்மிகுமார், மற்றும் RPL சீசன் 3 தலைவர் Dr. யேஷ்வந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

இந்த சிறுவர்களுக்கான கேன்சர் மருத்துவமனைக்கு நிதி திரட்டும் மூன்றாம் ஆண்டு இறகு பந்து போட்டி அம்பத்தூர் தொகுதி கொரட்டூரில் நடைபெற்றது. திரைப்பட நடிகர் கலையரசன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

25 வயதுக்கு மேற்பட்டோருக்காக நடைபெறும் இறகு பந்து போட்டியில் 130 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்து போட்டி தொடர் மூலமாக திரட்டப்படும் நிதியினை சிறுவர்களுக்கான கேன்சர் மருத்துவமனைக்கு உபகரணங்களை வாங்கி வழங்கப்படுகிறது.

இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்து பேசிய சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் நடிகர் கலை அரசன்

நம்முடைய மனநிலையை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க விளையாட்டு போட்டிகள் உதவியாக உள்ளது.
தற்போதுள்ள அரசு விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டி மென்மேலும் விரிவடைந்து பல்வேறு மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிரோம் என்றனர்..

Author: ADmiNIstRAtoR