தவெக அரசு தொழில்நுட்ப ரீதியாக தரம் குறைந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்க டெண்டர் கோரியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது

தூய சக்தி என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக வெள்ளை அறிக்கை வெளியிட்ட தவெக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 29 எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் வாங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. இயந்திரங்களை 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு பதிலாக, டெண்டர் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 7 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை செலவழிக்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு என்னதான் அதிக பணம் செலவழிக்க முன்வந்தாலும் அவை தொழில்நுட்ப ரீதியாகத் தரம் குறைந்த இயந்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்த எம்.ஆர்.ஐ இயந்திரம் வாங்கினால் தமிழக அரசுக்கு ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும் என மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை, டெண்டர் பெற்றவரின் பெயர் மட்டுமே இடம் பெறும் என்றும், இயந்திரம் குறித்த எந்த தகவலும் இருக்காது என்பதும் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எனவே மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள இந்திய நிறுவனங்களுக்கு டெண்டரில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உற்பத்தியாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Author: ADmiNIstRAtoR