மாவட்ட அரசு  மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற அனுமதி அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உண்ணா நிலை போராட்டம்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் – வெளிநாட்டுப் பிரிவு.

மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு அளவிற்கான இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்.

மாவட்ட அரசு  மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற அனுமதி அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (06.01.2026 ) சென்னையில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி

மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு அளவிற்கான இடங்களை கூடுதலாக உருவாக்கி, வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்.

மாவட்ட அரசு  மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற அனுமதி வழங்கிட வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு பயிற்சி மருத்துவம் பெற 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி வழங்கப்பட்டது. அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்கல்லூரிகளில் பயிற்சி மருத்துவம் மேற்கொள்ள மீண்டும் அனுமதியை வழங்கிட வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு (FMG) தற்காலிக தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில்  காலதாமதம் செய்வதை கைவிட வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களில் பலருக்கு, 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற வேண்டும் என  தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் உத்தரவுகள் வழங்குவதை  கைவிட வேண்டும்.

பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெறும்  ,வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கும்  தமிழ்நாடு அரசி விடுதி வசதிகளை வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களை அவமானப் படுத்தும் வகையில் அலட்சியமாகவும், பாரபட்சமாகவும், இழிவாகவும்,  நடத்துவதை கைவிட வேண்டும் .

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நிலவும், நிர்வாகச் சீர்கேடுகளையும், முறைகேடுகளையும் போக்கிட வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் நிலவும், பணியாளர்கள் பற்றாக்குறையை போக்கிட நடவடக்கை எடுத்திட வேண்டும்.போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் மாணாக்கர்களுக்கு உதவிட ,தேசிய அளவிலும் மாநில அளவிலும் உதவி மையங்களை உருவாக்கிட வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பார்வையாளர்கள் நேரத்தை காலை 11.00 முதல் பகல் 1.00 மணி வரை என நீட்டிக்க வேண்டும் .

பார்வையாளர்களை கனிவோடு நடத்திட வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 06.01.2026 அன்று,சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாநிலை போராட்டம்
சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம்   -வெளிநாட்டுப் பிரிவு சார்பில் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் டாக்டர் சரண் தலைமைதாங்கினார்.

இந்த உண்ணாநிலை போராட்டத்தை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் ஏ. ஆர் .சாந்தி துவக்கி வைத்தார் .

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ,சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்,மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் , ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகினர்.

மாநில பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த் பிலிப்ஸ் அபிஷேக்,நிர்வாகிகள் அரவிந்த் ,ஜெயலட்சுமி,
முகமது வாசிப் , ராகுல், நித்திஷ், தஸ்விந்த், பூபதி, அக்சய் பிரசாத்
உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

இப் போராட்டத்தை
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் முடித்து வைத்து நிறைவு உரை ஆற்றினார்.

இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
9940664343/ 9444181955

டாக்டர் எஸ்.வசந்த் பிலிப்ஸ் அபிஷேக் ,
பொதுச் செயலாளர்,
9994646743.
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் -வெளிநாட்டுப் பிரிவு.

Author: ADmiNIstRAtoR