மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பிப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை அன்று கண்காட்சிக்கு வருகைத் தந்தார்.
இந்திய ஜவுளித் துறையில் பிரபலமாக விளங்கும் கார்டன்® வரேலி நிறுவனம், தி சாட்டர்ஜி குழுமத்தின் (TCG) தலைமையில் ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தில் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிராண்ட் பெருமையுடன் அதன் சிக்னச்சர் கலெக்ஷனான ‘ப்ளூம் இன் கார்டனை’ பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது நேர்த்தி, கைவினைத்திறன் மற்றும் தற்காலத்திய ஃபேஷன் ஆகியவற்றை போற்றி சிறப்பிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் அழகு சேர்க்கும் விதமாக, ‘பிரிண்ட்ஸ் ஆஃப் இந்தியா’ கலெக்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்தியாவின் வளமான ஜவுளி பாரம்பரியத்திற்கு ஒரு கலை அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த கலெக்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆக பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் பலவிதமான புதுப்புது ரகங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
ஜவுளித் துறையில் விரைவான வளர்ச்சியை ஊக்குவித்து அதன் மூலம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் இந்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டும் வகையில் இந்த மதிப்புமிக்க கண்காட்சியில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாண்புமிகு பிரதமர் அவர்கள் பிப்ரவரி 16 ஆம் தேதி இந்தக் கண்காட்சிக்கு வருகை தந்தபோது, கார்டன்-எம்.சி.பி.ஐ அரங்கிற்குள் நுழைந்தார், அப்போது அங்குள்ள முன்னணி ஜவுளி நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழுவினருடன் கலந்துரையாடி மகிழ்ந்தார். கார்டன் நிறுவனத்தின் சார்பாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதவா பானர்ஜி பேசினார். செயற்கை இழை அடிப்படையிலான ஜவுளித் தொழிலின் தற்போதைய நிலை குறித்தும், இந்தத் துறையில் விரைவான வளர்ச்சிக்கு ஆதரவளிக்க பல்வேறு பிரிவுகள் மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
பிப்ரவரி 14 ஆம் தேதி தொடக்க விழாவில், மாண்புமிகு ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங் கார்டன்-எம்.சி.பி.ஐ அரங்கிற்குள் வருகை தந்தார். அமைச்சரின் வருகையின் போது எம்.சி.பி.ஐ நிர்வாக இயக்குனர் திரு. தேபி பிரசாத் பத்ரா மற்றும் வரேலி பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மகேந்திர சிங் பதூரியா ஆகியோர் உடனிருந்தனர். நுகர்வோருக்கு கட்டாய மதிப்பை வழங்குவதற்காக பி.டி.ஏ, நூல் மற்றும் துணி ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் டி.சி.ஜி குழும நிறுவனங்களின் தனித்துவமான நன்மையை அவர்கள் எடுத்துக் கூறினர்.
1970 களில் இருந்து செயல்பட்டு வருகின்ற சிறந்த பாரம்பரியத்துடன், கார்டன்® வரேலி ஆறு கெஜம் புடவையில் புதுமையையும் கலைத்திறனையும் புகுத்தி புதிய சாதனை செய்துள்ளது. இந்த பிராண்ட் இப்போது ஒரு உறுதியான பார்வையுடன் முன்னோக்கி பயணிக்கிறது, தலைமுறைகளைக் கடந்து பெண்களுக்கான பலதரப்பட்ட மற்றும் தற்காலத்திற்கேற்ப புராடக்ட் ரகங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தனது செயல்பாட்டை விரிவுபடுத்தும் வகையில், அதன் ஒரு பகுதியாக, கார்டன்® வரேலி வருங்காலத்தில் இந்தியா முழுவதும் பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்டுகளைத் திறக்கவுள்ளது., இந்த ஸ்டோர்களில் பிராண்டின் சிக்னச்சர் கலெக்ஷன்கள் மற்றும் பெஸ்போக் ஃபேஷன் கான்செப்ட்கள் அறிமுகப்படுத்தப்படும்.
GSMPL (கார்டன்® சில்க் மில்ஸ் பிரைவேட் லிமிடெட்), இயக்குநர் திரு.தேபி பிரசாத் பத்ரா கூறியதாவது, “ப்ளூம் இன் கார்டன் கலெக்ஷன்கள் மூலம், இந்திய பெண்களின் அடையாளம் மற்றும் ஆசைகளுக்கு ஏற்ப பொருத்தமான காலத்தால் அழியாத ஜவுளிகளைத் தயாரித்து வழங்குவதன் மூலம் அவர்களின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுகிறோம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிண்ட்ஸ் ஆஃப் இந்தியா கலெக்ஷனும் ஒரு கூடுதல் அதிர்வலையை ஏற்படுத்தி மற்ற கலெக்ஷன்களுடன் சேர்த்து நிறைந்த அளவிலான ரகங்களை மக்களுக்கு வழங்குகிறது”.
டி.சி.ஜியின் தலைமையின் கீழ், கார்டன்® வரேலி பாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒன்றிணைத்து பெண்கள் ஃபேஷனுக்கான ஒரே இடமாக உருவாகி வருகிறது” பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியில் இந்த ப்ளூம் இன் கார்டன் கலெக்ஷன்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், புதுமை, கைவினைத்திறன் மற்றும் எளிதாக வாங்கும் நிலை ஆகியவற்றால் உந்தப்படும் கார்டன்® வரேலியின் புதிய பயணம் ஆரம்பிக்கிறது. இந்த பிராண்ட் இந்திய ஃபேஷனை நேர்த்தி மற்றும் அசல் தன்மையுடன் செம்மையாக்குவதில் உறுதியாக உள்ளது.


















