தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு, தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மற்றும் அந்த அமைப்பின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது, மின் கட்டண உயர்வை கைவிடுதல், சொத்து வரியை குறைப்பது, வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், முதற்கட்டமாக தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது, விரைவில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தார். மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கவலைப்படாமல் மக்களை வாட்டி வதைக்கும் வகையில் செயல்படுகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஜிஎஸ்டி வரியில் மாநில அரசு மத்திய அரசையும் மத்திய அரசு மாநில அரசையும்  குற்றஞ்சாட்டி வருகின்றனர் எனவும் வருவாயை அதிகரிப்பது மட்டுமே அரசுகளின் நோக்கமாக உள்ளது எனவும் அவர் கூறி உள்ளார். விலை உயர்வால் முதலில் வணிகர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர், வணிகர்கள்தான் வாடிக்கையாளர்களுக்கு பதில் கூற வேண்டி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலை உயர்வால் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

சாமானிய வணிகர்கள் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று உறுதியாக செயல்படுகிறார்கள், அதற்கு தொடர்ந்து முயற்சித்தும் வருகிறார்கள் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் பெரிய உற்பத்தியாளர்கள் அதன் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவர எண்ணவில்லை ஆனாலும் அதிகாரிகள் வணிகர்களையே தொடர்ந்து வாட்டி வதைக்கின்றனர் என அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். கோயில் நிலத்தில் வாடகைக்கு இருக்கும் வணிகர்களும் வாடகை உயர்வால் பாதிக்கப்படுகின்றனர், கோயில் சொத்துகளை ஒழுங்குபடுத்துகிறோம் என அதிகாரிகள் அதனை கொள்ளையடித்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வியாசை மணி, டைமன் ராஜா வெள்ளையன் மெஷ்ரம் மாவட்டத் தலைவர்கள் செ.துரை மாணிக்கம், கிருஷ்ணகுமார், சந்தானம், ராகவேந்திரா மணி..உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR

9 thoughts on “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  1. Pingback: Bolno NKSFB
  2. Pingback: buy MDMA online
  3. Pingback: sci-sciss
  4. Pingback: buôn lậu
  5. Pingback: 보증사이트

Comments are closed.