14 வருடத்திற்கு முன் ஜீவா படத்தில் நடித்துள்ள மாரி செல்வராஜ்

கர்ணன் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு கோலிவுட் வட்டாரத்தில் மாரி செல்வராஜ் என்ற பெயர் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு படம் சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தனுஷ் மற்றும் கலைப்புலி எஸ் தாணு கூட்டணியில் அசுரன் என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு உருவாகி அதையே மிஞ்சும் அளவுக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் கர்ணன்.

கண்டிப்பாக கர்ணன் படத்திற்கும் ஒரு தேசிய விருது நிச்சயம் எனும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் அதிக அளவில் பரவி வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக மாரிசெல்வராஜ் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில்கூட விக்ரம் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்தார் என்பதும் கூடுதல் தகவல்.

இன்று தமிழ்நாடே கொண்டாடும் இயக்குனராக மாறியிருக்கும் மாரிசெல்வராஜ் 2007 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகராக வேண்டுமென்று சினிமாவுக்குள் வந்து தற்போது தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்குனர் ராம் என்பவரிடம் உதவி இயக்குனராக கற்றது தமிழ், தங்க மீன்கள் மற்றும் தரமணி போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

~ நன்றி சினிமா பேட்டை

Author: ADmiNIstRAtoR