10ம் வகுப்பு மாணவி முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு மாணவி முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (24) இவர் வாடகை கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில், அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல மாதங்களாக அந்த மாணவிக்கு இந்த இளைஞர் தொந்ததவு கொடுத்து வந்துள்ளார்.

மேலும், தன்னை காதலிக்க வேண்டும் என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பள்ளி மாணவியை நகராஜ் மிரட்டியதாகக் கூறப்படுகின்றது. அத்துடன், இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில், தாம்பரம் அனைத்து மகளீர் காவல்துறையினர் நாகராஜை கைது செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண் மிகவும் அழகான இருப்பதால் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் என்று நினைத்தாக நாகராஜ் கூறினார்.

இதையடுத்து நகராஜ் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Author: ADmiNIstRAtoR

12 thoughts on “10ம் வகுப்பு மாணவி முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

  1. Pingback: bonanza178
  2. Pingback: click here
  3. Pingback: BAU
  4. Pingback: pgslot

Comments are closed.