விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்த பின்னணியை சித்தரிப்பதாக பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது ‘மேதகு’ திரைப்படம்.
பிரபாகரன் பிறப்பு, 1950-களின் பிற்பகுதியில் நடந்த இனக்கலவரம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1980 வரை நடந்த அரசியல் மாற்றங்கள், கல்வி போராட்டம், பிரபாகரனின் முதல் அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை தற்போது வெளியாகியிருக்கும் முதல் பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘தி ஃபேமிலிமேன்’ இணையத்தொடர், ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்டவை ஈழத்தமிழர்கள் கதையை சித்தரித்ததில் பிழைகள் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்ப, தற்போது வெளியாகியிருக்கும் ‘மேதகு’ பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது.
படத்தை எப்படியும் வெளியிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால், அது திரையரங்குகளில் இருக்காது, ஓடிடி தளத்தில்தான் வெளியாகும் என்பது தெரிந்திருந்தது. எதற்கும் தயாராகவே இருந்தோம். அந்த வகையில், தற்போது பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் ‘மேதகு’ வெளியாகியிருப்பதில் மகிழ்ச்சி.
படம் பொருத்தவரையில் இரண்டு விஷயங்களில் எங்களுக்கு பிரச்சனைகள் இருந்தது. ஒரு விஷயம் படத்துக்கு தேவையான பட்ஜெட். மற்றொன்று வெளியில் இருந்து வந்த எதிர்ப்புகள். ‘என்ன கதை செய்து கொண்டிருக்கிறீர்கள்? எங்கே இருக்கிறீர்கள்? என்பது போன்ற விசாரிப்புகள் வரும். இதனாலேயே உடனுக்குடன் நாங்கள் படப்பிடிப்பு தளத்தையும் மாற்ற வேண்டிய சூழலும் இருந்தது. ஆனால், படக்குழு நாங்கள் இளைஞர்கள் என்பதால், இந்த பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடிந்தது.
அதேபோல, ஈழத்தமிழர்கள் சிலர் படம் தொடங்கும்போது தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் இதுதான், ‘இதுவரை வந்த பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கதையில் எங்களை சரியாக சித்தரிக்கவில்லை.
அவர்களுடைய பேச்சு வழக்கு, வலி இதுபோன்ற விஷயங்கள் எதுவும் உண்மையாக சித்தரிக்கமால், சினிமாவுக்காக சில விஷயங்கள் திரித்து காண்பிக்கப்படுகிறது. நாங்கள் நேசிக்கக்கூடிய தலைவரை இதுவரையிலும் சரியாக யாரும் காண்பிக்காதபோது, இளைஞர்கள் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? உங்களை நம்பலாமா?’ என்பதுதான் அவர்களது வாதமாக இருந்தது.
ஆனால், டீசர், ட்ரைய்லர் வெளியானதும் அதில் இடம்பெற்ற காட்சிகள் பார்த்ததும் அவங்களுக்கு சரியாகதான் காட்டியிருப்போம் என்ற நம்பிக்கை வந்தது. படம் இப்போது வெளியானதும் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் மாறியிருக்கிறது என்றே நினைக்கிறேன்”.
புத்தகங்கள் அதிகமாக படிக்கக்கூடிய நபர் நான். அதில் அதிகமாக தலைவர்கள் குறித்தான புத்தகங்கள் எனக்கு பிடிக்கும். அதில் நான் படித்த தலைவர்களில் அப்பழுக்கற்று, சமரசமற்ற ஒரு மாவீரராக என்னுடைய தேசிய தலைவரைதான் பார்க்கிறேன்.
குறிப்பாக, 2009-க்கு பிறகு இந்த வலிகள் அதிகமாகவே இருந்தது. என் இனத்தின் வலிகளை யாரும் சரியாக சொல்லவில்லை என்பதும் குறைதான். 2013-க்கு பிறகு தம்பி பாலச்சந்திரன் புகைப்படம் வெளிவந்தபோது, மாணவர் போராட்டத்தை தஞ்சாவூரில் முன்னெடுத்தோம். அப்போதிருந்தே, இந்த விஷயங்கள் எல்லாம் திரையில் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
பின்பு துணிந்து ஒரு குறும்படம் எடுத்தோம். ‘மேதகு’ படத்தின் க்ளைமேக்ஸ்தான் அந்த குறும்படத்தின் முழுக்கதையும். அதாவது, துரையப்பா படுகொலை மட்டுமே முழுதாக அதில் எடுத்திருப்போம். அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதன்பிறகுதான், பிறப்பில் இருந்து துரையப்பா படுகொலை வரை கூத்து வாயிலாக ஒரு பாகம் சினிமாவாக எடுக்கலாம் என்று எண்ணினோம். ஆனால், பட்ஜெட் காரணமாக இது உங்களுக்கு டாக்குமெண்ட்ரி படமாக தோன்ற வைக்கலாம். இதை ஒரு இயக்குநராக ஒத்து கொள்கிறேன். அடுத்தடுத்த பாகங்களில் இந்த குறைகள் சரிசெய்யப்படும். இப்போது நாங்கள் கொடுத்திருப்பதை எங்களால் முடிந்த அளவு சரியாகவே செய்திருக்கிறோம் என நம்புகிறேன்.
தவறான சித்தரிப்பை மீண்டும் மீண்டும் படமாக்குவதன் மூலம் மக்கள் அதை உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் இந்த சித்தரிப்புகளில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘தி ஃபேமிலிமேன்’ இணையத்தொடர் எங்களது போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. எங்களது போராட்டம் உன்னதமானது. எத்தனை விதமான தவறான சித்தரிப்புகள் வந்தாலும், ‘மேதகு’ படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, ‘திருப்பி அடிக்கவே’ இந்த படம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் பதிலடி.
உண்மையான விஷயங்களை காட்டினால் அதை மக்கள் பார்ப்பார்களா என்ற பயம் பெரும்பாலான படைப்பாளிகளுக்கு உள்ளது. இந்த படம் அந்த பயத்தை முற்றிலுமாக நீக்கியிருக்கிறது என்றே சொல்வேன். இனிமேல், ஈழத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை சொல்லும் படங்கள் அதிகம் வரும் என்றே நினைக்கிறேன்”.
படத்தின் முன்னாட்டம் (Preview Show) காண்பித்த பிறகு உண்மை வரலாற்றைதான் காண்பித்திருக்கிறோம் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்தது. கடந்த மே 22-ல் படம் வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால், முன்பு படம் வெளியாக இருந்த ஓடிடி தளம் பின்வாங்கியது. மே 21 அன்று இரவு ‘இந்த படம் வெளியானால் எங்களுக்கு சிக்கல்’ என தொலைபேசியில் அழைத்து சொன்னார்கள். அதன் பிறகுதான் நாங்கள் பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தை அணுகினோம். ‘எந்த பிரச்சனை என்றாலும் பார்த்துக்கொள்ளலாம். நல்ல கதை இது’ என படத்தை வெளியிட அவர்கள் தைரியமாக முன்வந்தார்கள்.
தமிழர்களுடைய வரலாற்றையும், போராட்டத்தையும் கொண்டு போய் சேர்க்க டிஜிட்டல் தளம் உருவாக வேண்டும் என்ற ஆசையும் உண்டு
அடுத்தடுத்த பாகங்களுக்கான கதைகள் எல்லாம் தயார் செய்ய இருக்கிறோம். அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் போன்ற விவரங்கள் எல்லாம் ‘தமிழீழத் திரைக்களம்’ சார்பாக முறையாக அறிவிக்கப்படும். கதையின் தேவையை பொறுத்து 3லிருந்து 5 பாகங்கள் வரை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
~ நன்றி பிபிசி தமிழ்





















8 thoughts on “மேதகு திரைப்படம்: ‘ஜகமே தந்திரம்’, ‘தி ஃபேமிலிமேன்’ கதைகளுக்கான பதிலடி – இயக்குநர் கிட்டு”
Comments are closed.