சென்னை 26.2.2021: சிந்தாதிரிப்பேட்டை காயிதே மில்லத் கல்லூரி அருகில் தமிழ்நாடு அரசு எஸ் சி /எஸ் டி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக மாநில அளவிலான தூய்மைப் பணியாளர்கள் சம்பந்தமான தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநிலத் தலைவர் டாக்டர் எம்.பி முத்தாரப்பன், தலைமையில் நடைப்பெற்றது இதில் ஐந்து அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்.மா. முருகானந்தம் மாநில பொதுச்செயலாளர், டாக்டர். பி. சரவணன் மாநில பொருளாளர் ஆகியோர், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
திரு. காந்தி காமராஜ் மாநில துணைத்தலைவர், திரு. எம். மனோகரன் மாநில துணைத்தலைவர், திரு. பி. அந்தோணி மாநில துணைத்தலைவர், திரு. எம். சந்திரசேகர் மாநில துணைச் செயலாளர், திரு. எஸ். சிவராமன் மாநில துணை பொதுச்செயலாளர், திரு. ஆத்தியப்பன் மாநில இணைச் செயலாளர், திரு. கே. பிரபு தாஸ் மாநிலத் தலைவர், திரு. சுபாஷ் சந்திரன் மாநில பிரச்சார செயலாளர். திரு. கண்ணன் மாநில இணைச்செயலாளர், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்
5-ந்து அம்ச கோரிக்கைகள்
கோரிக்கை-1
அரசாணை எண் 81 மற்றும் 82 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 10-082020 வெளியிட்ட அரசாணையில் பணியில் இளைஞர்களாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் சிறப்பு கால முறை ஊதியத்தில் கொண்டுவர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணியில் மூத்தவர்களாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் எல்லா தகுதி இருந்தும் அரசாணையில் விடுபட்டுள்ளனர். விடுபட்டுள்ள பகுதி நேர தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தில் அரசாணை பிறப்பிக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
கோரிக்கை -2
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் குறைந்த ஊதியத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி புரிந்து வருகின்ற தூய்மை பணியாளர்களுக்கு பிற ஊழியர்களை போல் காலமுறை ஊதியத்தில் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
கோரிக்கை- 3
தமிழக அரசு சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்திலிருந்து சி பி எஸ் பென்சன் திட்டத்தில் பங்களிப்பு நிதி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பிடித்தம் செய்ய வேண்டாம் என்ற தமிழக அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்து மீண்டும் ஊதியத்தில் பங்களிப்பு நிதி பிடித்தம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும
கோரிக்கை- 4
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் பணிபுரிந்து பகுதிக்கானபருவம் முடிக்க பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, தூய்மை பணியாளர்கள் நிலையில் இருந்து 50% அடிப்படையில் சமையலர், ஏவலர், காவலர், பதவி உயர்வு அ ளித்திட தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
கோரிக்கை -5
அரசாணை எண் 65 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்.09-04-1997- படி அனைத்து துறைகளிலும் எஸ்சி/ எஸ்டி கமிட்டி உறுப்பினர் நியமனம் செய்து எஸ்சி/ எஸ்டி பணியாளர்கள் குறைகளை களைந்திட தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.





















13 thoughts on “மாநில அளவிலான தூய்மை பணியாளர்கள் சம்மந்தமான தமிழகஅரசின் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்”
Comments are closed.